எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குழந்தைகளுக்கு தாய்பால் தான் தரவேண்டும் என்று, குழந்தை பெற்ற பெண்களுக்கு அவர்களது தாய்மார்கள் எடுத்து சொல்வதுண்டு. இது தங்கள் அழகை கெடுத்துவிடும் என நினைத்து பல பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு பால் தர மறுக்கின்றனர்.
தாய்பாலில் அப்படி என்னதான் சத்துக்கள் உள்ளன என்று குழந்தை பெற்ற எல்லா பெண்களுக்கும் தெரிந்து வைத்துள்ளனரா? என்றால் ஒரு சிலர் இல்லை என்றே சொல்லுவர். தாய்பால் குழந்தைக்குத் தேவையான சத்துக்களை எப்படி ஈடு செய்கிறது? ஒரு குழந்தைக்கு தாய்பால் பற்றாக்குறைகூட ஏற்படுமா? என்கிற கேள்விகளுக்கு சென்னை இசபெல்லா மருத்துவமனையில் பணிபுரியும் நியோ நேட்டால ஜிஸ்ட் மருத்துவர் சுப்பிரமணியன் இவ்வாறு பதில் அளிக்கிறார்.
தாய்பாலில் மட்டும் தான் பச்சிளம் குழந்தைக்குத் தேவையான கால்சியமும், பாஸ்பரசும் 2 : 1 என்கிற விகிதத்தில் உள்ளது. இதுதான் குழந்தைக்கு சரியான அளவுகோல். பசும் பாலில் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும். ஆனால் அது கால்சியத்துடன் இணைந்து சால்டாக மாறிவிடும். எனவே பசும்பாலில் உள்ள கால்சியம் பச்சிளம் குழந்தைகளுக்குப் பயன்படாத கால்சியமாகவே இருக்கிறது. அது போலத்தான் பசும்பாலில் கேசின் வே (caesin-whey) புரோட்டீன் தான் இருக்கிறது.
பச்சிளம் குழந்தைக்குத் தேவையானதோ 'வே' (whey) புரோட்டீன். இந்த 'வே' (whey) புரோட்டீன் தாய்பாலில் மட்டும்தான் உள்ளது. இந்த புரோட்டீன் தான் பச்சிளம் குழந்தைகளுக்கு பொருத்தமான வகை புரோட்டீன். பசும்பாலில் இப்படி பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் எதுவும் சரிவிகிதத்தில் இல்லாததனால் பச்சிளம் குழந்தையின் மெத்தென்ற குடலில் அலர்ஜி உண்டாகும். இதனால் வயிற்றுப்போக்கு ஆகும்.
மலத்தில் கண்ணுக்குத் தெரியாமல் பிளீடிங் கூட ஆகும். தாய்பாலால் குழந்தைக்கு மேற்சொன்ன பிரச்சனைகள் எதுவும் வராது. தாய்பாலில் உள்ள மைக்ரோ நியுட்ரிஷியன்ஸ் குழந்தைக்குத் தேவையான இன்பெக்ஷன் எதிர்ப்புச்சக்தியைத் தரும். தாய்பால் குடிக்கும் குழந்தைக்கு வயிற்று வலிவருவதற்கான வாய்ப்புக்கள் மிக, மிக குறைவு. பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புகள் மிக, மிக அதிகம். வேலைக்குப்போகும் தாய்மார்கள் குழந்தைக்கு தாய்பால் கொடுப்பது எப்படி ?
குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் வரை தாய்க்கு அலுவலகத்திலிருந்து கட்டாய ஓய்வு தேவை. தவிர இந்த மூன்று மாதகால அவகாசம் குழந்தைக்கு தாய்பால் முழுமையாக கொடுக்கவும் பயன்படுகிறது. அதன் பின் தாய் ஒரு வாரம், பத்துநாளில் வேலைக்குப் போக வேண்டும் என்றால், தாய்பாலை முன் கூட்டியே எடுத்து வைத்து விட்டால் நான்கு மணி நேரம் வரை அந்த பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். குளிர்சாதன பெட்டியில் பத்திரமாக வைத்தால் 7 முதல் 10 நாள் வரை தரலாம். தாய்பாலை குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியில் எடுத்து வைத்து, அது அறையின் சீதோஷன நிலைக்கு சரியாக வந்தவுடன் கரண்டி அல்லது பாலாடையில், குழந்தைக்குப் புகட்டலாம்.
கண்டிப்பாக பாட்டில் பழக்கப்படுத்தாதீர்கள். அப்படி பாட்டிலில் கொடுத்தால் காது வலி, அல்லது டயரியா வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். குளிர்சாதன பெட்டியில் அல்லது பிரீஷரில் வைத்திருக்கும் பாலை எடுப்பதற்குள் குழந்தை அழுகிறதென்றால் எப்படி உடனடியாக பால் ஊட்டுவது? ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் தாய்பாலை விட்டு, அதை கொதிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தின் உள்ளே வைத்துவிடுங்கள். பால் வெது, வெதுப்பான நிலைக்கு வந்தவுடன் பாலை குழந்தைக்குப் புகட்டுங்கள். அலுவலக நேரங்களில் கூட, தாய்மார்கள் மார்பகத்தில் ஊறியிருக்கும் தாய்பாலை பம்ப் செய்து எடுத்து அலுவலக குளிர்சாதன பெட்டியில் வைத்து பின் வீட்டில் எடுத்து வந்து வைக்கலாம். எச்சரிக்கை: தாய்பாலை நேரடியாக சூடு செய்யக்கூடாது. தாய்பால் இல்லை என்கிற குற்றச்சாட்டு சரியானதா ?
ஒரு பெண்ணிடம் தாய்பால் போதுமான அளவு சுரப்பு இல்லை என குற்றம் சுமத்த முடியாது. குழந்தைக்கு தவறான நிலையிலிருந்து பாலூட்டினாலோ, நிப்புள் வலிக்கும் படியாக வெறும் நிப்புளை மட்டும் குழந்தையின் வாயில் வைத்து பாலூட்டினாலோ, தாய்க்கு தாய்பால் ஊறாது. இதற்கு சரியான ஆலோசனை பெற்று, தாய்பால் புகட்டினால் கண்டிப்பாக தாய் பால் ஊறும். தாய்பால் போதுமானதாக இல்லை என்றால் மருத்துவர்கள் அவ்வளவு சீக்கிரம் ஒரு பெண்ணுக்கு தாய்பால் ஊற மருந்துகள் பரிந்துரைப்பதில்லை. உணவின் மூலமே இயற்கையாக தாய்பால் ஊறுவதே சரி. உண்மையில் தேவைப்பட்டால், நம் உணவையே மையமாகக் கொண்ட சித்த ஆயுர்வேத மருந்துகளை பரிந்துரைப்பார்கள். தாய்பாலில் இல்லாத சத்துக்கள் ஏதேனும் உண்டா ஆம். ஒரு குறை உண்டு. தாய்பாலில் வைட்டமின் 'டி' இல்லை என்பது இரண்டு வருடத்திற்கு முன் நிரூபிக்கப்பட்ட ஆராய்ச்சி உண்மை. எனவே குழந்தை பிறந்த உடனே வெறும் வைட்டமின் 'டி' சொட்டு மருந்தும் தரவேண்டும். குழந்தை பெற்ற பெண்களும் இதை கேட்டு வாங்க வேண் டும்.
நமது நாட்டு சீதோஷண நிலையில் தான் வெயில் அதிகமாயிற்றே. நமக்கு இயற்கையாகவே வைட் ட மின் டி கிடைக்குமே என நீங்கள் நினைத்தால் அது தவறு. நமது கருந்தோல் அவ்வளவு விரைவில் வைட் டமின் “டி”யை உள்வாங்கும் தன்மை வாய்ந்ததாக இல்லை என்பதுதான் உண்மை. ஒரு தாய்க்கு வைட்டமின் டி பற்றாக்குறையாக இருந்தால், குழந்தைக்கும் வைட்டமின் டி பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எனவே குழந்தை பிறந்த உடனே வைட்டமின் டி சொட்டு மருந்தும் கொடுத்துப் பழக்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-10-2025.
23 Oct 2025 -
முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு
23 Oct 2025ரேக்ஜாவிக், ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்துள்ளது .
-
நடிகை மனோரமா மகன் பூபதி மறைவு
23 Oct 2025சென்னை, மனோரமா மகன் பூபதி நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
-
வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி
23 Oct 2025சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து உயர்வு: குளிக்க - பரிசல் இயக்க தடை
23 Oct 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை
23 Oct 2025சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது.
-
தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி
23 Oct 2025திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
-
இன்று முகூர்த்த தினம் எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
23 Oct 2025சென்னை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
-
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Oct 2025சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு உள்ள தேவர் சிலைக்கு
-
டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்
23 Oct 2025புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்
23 Oct 2025சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
ஆசியான் உச்சி மாநாடு: காணொளி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு
23 Oct 2025புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாடுட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்கிறார்.
-
புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து
23 Oct 2025மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கி
-
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் இன்று உருவாகிறது
23 Oct 2025சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் இன்று உருவாகிறது என்றும் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்
-
நிவாரண பணிகள் பற்றி பேச அருகதையில்லை: இ.பி.எஸ். மீது அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
23 Oct 2025சென்னை: நிவாரண பணிகள் பற்றி பேச இ.பி.எஸ்-க்கு அருகதை இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
23 Oct 2025டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
23 Oct 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு
23 Oct 2025பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
23 Oct 2025சென்னை, வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது.
-
வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
23 Oct 2025சென்னை: வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
23 Oct 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல்: மத்திய அரசுக்கு நயினார் நன்றி
23 Oct 2025சென்னை, தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து நயினார் நாகேந்திரன் வரவேற்பு அளித்துள்ளார்.
-
தூய்மை பணியாளர்களுக்கு தினசரி இலவச உணவு: முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த தமிழக அரசாணை வெளியீடு
23 Oct 2025சென்னை: முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
-
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் சட்டப்பேரவையில் தவறான தகவல்: அமைச்சர் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
23 Oct 2025சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று சட்டமன்றத்தில் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அ.தி.மு.க.
-
சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பொன்னுசாமி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
23 Oct 2025சென்னை: சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பொன்னுசாமி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர்