முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாநகராட்சியில் புகார் செய்யுங்க... பரிசை வெல்லுங்க...' புதிய திட்டம் அறிமுகம்: புகார் செய்ய டிசம்பர் 30 கடைசிநாள்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      ஈரோடு

புகார் செய்யுங்க... பரிசை வெல்லுங்க... என்னும் புதிய திட்டத்தை ஈரோடு மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் டிச.30-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் புகார் செய்து பரிசை பெறலாம்.மத்திய அரசு தூய்மை இந்தியா இயக்கம் மூலம் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஆண்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டது. இதில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள 73 நகரங்களைத் தேர்ந்தெடுத்தது. இதில் அந்தந்த மாநகராட்சி ஆணையர்கள் உத்தரவின்பேரில் தூய்மைப் பணிகள் மேற்கொண்டனர்.
இதில் நாடு முழுவதும் மேற்கொண்ட தூய்மைப் பணிகளில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு முதலிடமும், தமிழகத்தில் மதுரை மாநகராட்சி 3-ஆவது இடமும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த ஆண்டு தூய்மை இந்தியா திட்டம் மூலம் தூய்மை நடவடிக்கை மேற்கொள்வதற்கு 500 நகரங்களை தேர்வு செய்துள்ளது. இதில் ஈரோடு மாநகராட்சியும் உள்ளது. நாடு முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு தூய்மை இந்தியா இயக்கம் மூலம் SW​A​T​C​H​H​A​TA​ செல்லிடப்பேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை h‌t‌t‌p:​b‌i‌t.‌l‌y2‌h‌v​H​I‌r‌y என்ற இணையதள இணைப்பில் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

.புகைப்படம் எடுத்து புகார் அனுப்பலாம்
இந்த செயலியை தமிழ் மொழியிலும் பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் தங்கள் முகவரியை பதிவு செய்துகொண்டு உங்கள் வீட்டுக்கு அருகில் குப்பைத் தொட்டியில் குப்பைகள் நிரம்பி சிதறிக் காணப்பட்டால், அதனை செல்லிடப்பேசி அல்லது கேமராக்களில் புகைப்படம் எடுத்து புகார் அனுப்பலாம். வீடு அல்லது அலுவலகத்தின் அருகில் குப்பைத் தொட்டி இல்லாமல் தெருவில் குப்பை கொட்டப்பட்டாலும், பொதுக் கழிப்பிடம் சுத்தமாக இல்லாமல் இருந்தாலும் புகைப்படம் எடுத்து புகார்கள் அனுப்பலாம்.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் கூறுகையில், ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட  பகுதியில் குப்பைக் கழிவுகள், பொதுக் கழிப்பிடம் சம்பந்தப்பட்ட புகார்களை தூய்மை இந்தியா இயக்கம் ஸ்வச்சதா செல்லிடப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து புகைப்படத்துடன் புகார்கள் அளிக்கலாம்.   இவ்வாறு புகார் செய்யப்பட்டவுடன் ஜி.பி.எஸ் மூலம் முகவரியுடன் மாநகராட்சி ஆணையர் செல்லிடப்பேசிக்கு உடனடியாக வந்துவிடும். புகார்கள் பெற்ற 12 மணி நேரத்தில் அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகாரில் சொல்லப்பட்ட இடத்தினை சுத்தம் செய்யப்பட்ட உடன் மீண்டும் அந்த ஸ்வச்சதா செயலியில் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் வெளியிடப்படும்.

பரிசு வழங்கப்படும்
இந்த செயலி மூலம் தூய்மை சம்பந்தப்பட்ட புகார்களை அதிகம் கொடுப்பவர்களுக்கு பரிசும் வழங்கப்படும். இந்த செயலி மூலம் புகார்கள் அளிக்க கடைசி டிசம்பர் 30-ஆம் தேதி ஆகும். இரவு 10 மணி வரை புகார்கள் அளிக்கலாம். இதுவரை 20 புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஏற்கெனவே 2 பேர் பரிசு பெற்றுள்ளனர் என்றார்.புகார் செய்யுங்க... பரிசை வெல்லுங்க... என்னும் புதிய திட்டத்தை ஈரோடு மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் டிச.30-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் புகார் செய்து பரிசை பெறலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago