எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,செப்.- 29 - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இதனை கண்டுகளித்தனர். வரும் 6 -ம் தேதி வரை இந்த கொலு பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். சாத்கம், சைவம், கணபதியம், கெளமரம் என்ற பக்தி கொள்கைகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளிலும் தலா 7 படிகள் கொண்டதாக இந்த கொலு, நவராத்திரி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மந்த்ரா கோல்ட் கோட்டிங்ஸ் என்ற பிராண்டில் தங்க மூலாம் பூசப்பட்ட ஆன்மீகப்பொருட்களை விற்பனை செய்து வரும் சென்னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் நமது அர்ப்பணிப்பின் அடையாளமாக இந்த கொலுவினை ஏற்பாடு செய்துள்ளது. இந்த கொலுவில் 3 அங்குலம் முதல் 3 அடி உயரம் வரை பல்வேறு அளவுகளில் களிமண், தங்க மூலாம் பூசப்பட்ட பித்தளை, மரம், செம்பு,பிளாஸ்டர் ஆப்பாரிஸ், காகிதக்கூழ் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களால் உருவாக்கப்பட்ட பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கோபுரக் கலசம், அஸமாணகிரி ஆகியவை மேல் படியில் வைக்கப்பட்டு, தொம்பை, மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு, ஒட்டுமொத்தமாக அந்த கொலு மண்டபமே அழகாக காட்சியளிக்கிறது. இக்கணகாட்சியின் நடுநாயகமாக மதுரை மீனாட்சி அம்மன், சொக்கநாதர், அதிகார நந்தி ஆகிய தெய்வங்கள் வீற்றிருக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |