எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல்லேகெல்லே, மார்ச் 8 - உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி ஒன்றில் பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் மோத இருக்கின்றன. 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் ஏ பிரிவு லீக் போட்டி ஒன்றில் 3 போட்டிகளில் தொடர் வெற்றியை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. நியூசிலாந்தைப் பொறுத்தவரை இந்த போட்டி அந்த அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். ஏ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பை போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாக். கேப்டன் அப்ரிடி எதிர் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி இலங்கையின் பல்லேகெல்லே நகரில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சோபிக்காவிட்டாலும் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் அப்ரிடி தலைமையில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி, கடந்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தங்கள் அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டு தொடரை 3 - 2 என்ற கணக்கில் வென்றதையும் குறிப்பிட்ட வெட்டோரி, தற்போதும் பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஒரு அணியாக வலம்வந்துகொண்டிருப்பதாக தெரிவித்தார். அந்த அணியின் பந்துவீச்சு பலம் அச்சுறுத்தக்கூடிய ஒன்று என்பதையும் ஒத்துக்கொண்டார். அந்த அணியை எதிர்கொள்வது சற்று கடினமான ஒன்றுதான் என்றார் வெட்டோரி. அந்த அணி கனடாவிற்கு எதிராக 185 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டாலும், பாக். அணி தனது பந்துவீச்சு பலத்தால் கனடாவை எளிதாக வென்றதையும் குறிப்பிட்டார். ஆனாலும் தங்களது அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என்றும் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் துவக்க வீரர்கள் மிகப் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஆனால் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் முகமது ஹபீஸ் மற்றும் அஹமது ஷேஜாத் ஆகியோர் கடந்த மூன்று போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இவர்களுடைய பார்ட்னர்ஷிப் மிக மோசமாக இருந்துவருகிறது. கென்யாவிற்கு எதிரான போட்டியில் 11 ரன்களையும், இலங்கைக்கு எதிரான போட்டியில் 28 ரன்களையும், கனடாவிற்கு எதிரான போட்டியில் 16 ரன்களை மட்டுமே இவர்கள் பார்ட்னர்ஷிப்பாக எடுத்துள்ளனர். இவர்கள் இப்படி விளையாடினாலும் இவர்கள் மேல் நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் துவக்க ஆட்டக்காரர்கள் நிலையில் எந்த மாற்றத்தையும் இதுவரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் பாக் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்க வீரர்கள் இருவரில் ஹபீஸ் ஓரளவு சிறப்பாக செயல்படுகிறார். அதிலும் இவர் நியூசிலாந்துக்கு எதிரான கடந்த தொடரில் ஒரு சதம் மற்றும் 3 அரை சதங்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் குப்தில் மற்றும் மெக்கலம் ஆகியோர் அதிரடியாக செயல்படும் பட்சத்தில் அந்த அணி மற்ற ஆல்ரவுண்டர்களின் உதவியுடன் பாகிஸ்தான் அணியை ஒரு கை பார்க்கலாம். கடந்த 3 போட்டிகளில் வென்றதன் மூலம் ஏற்கனவே காலிறுதி போட்டிக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்ட பாகிஸ்தானுக்கு இது அவ்வளவு முக்கிய போட்டி இல்லை. ஆனால் நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை அந்த அணிக்கு இது மிகவும் முக்கியமான போட்டியாகும். இலங்கையில் மழை அச்சுறுத்தல் வேறு அவ்வப்போது இருந்துகொண்டிருக்கிறது. இந்த மைதானத்தில் உலக கோப்பை போட்டிக்கு முன் நடக்கவிருந்த பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்துள்ள நியூசிலாந்து சிறிய அணிகளான கென்யா மற்றும் ஜிம்பாப்வே அணிகளை மட்டுமே வென்றுள்ளது. இன்று பகலிரவு போட்டியாக இந்த போட்டி நடைபெற இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவல்: தமிழகத்தில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்: மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
26 Dec 2025சென்னை, கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் ரூ.1,045 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பல்துறைகளின் சார்பில் 2,16,056 பயனாளிகளுக்கு ரூ.1,045 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு
-
உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆசனூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கி
-
கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி: நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க படை திடீர் தாக்குதல்
26 Dec 2025அபுஜா, நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க ராணுவம் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-12-2025.
26 Dec 2025 -
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்
26 Dec 2025சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்
26 Dec 2025புதுடெல்லி, பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகள்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, ரூ.10 கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளிட்ட கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை
26 Dec 2025ஒட்டாவா, கனடாவில் 20 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
நல்லகண்ணு பிறந்த நாள்: துணை ஜனாதிபதி வாழ்த்து
26 Dec 2025புதுடெல்லி, நல்லகண்ணு பிறந்த நாளை முன்னிட்டு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வருபவர் என்றும் அவர்
-
தமிழ்நாட்டில் மதவெறி ஆட்டத்துக்கு இடமில்லை: கள்ளக்குறிச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, எம்மதமும் சம்மதம் என்பதே தமிழ்நாடு. மதவெறி ஆட்டத்துக்கு இங்கு இடமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மத நல்லிணக்கம் பா.ஜ.க.வின் கண்களை உறுத்துகிறது.
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறொரு இந்தியா உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Dec 2025கள்ளக்குறிச்சி, இந்து பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் 'ரோஸ் மில்க்’ கொடுக்கின்றனர் என்று தெரிவித்த முதல்வர்மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.
-
தமிழ்நாடு சட்டசபை ஜன. 20-ல் கூடுகிறது
26 Dec 2025சென்னை, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.
-
ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சம்: வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 9,000 உயர்வு
26 Dec 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,03,120-க்கும் கிராமுக்கு ரூ.
-
அ.தி.மு.க.வில் விருப்பமனு பெற அவகாசம் டிச. 31-வரை நீட்டிப்பு
26 Dec 2025சென்னை, அ.தி.மு.க.வில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும்: அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியீடு
26 Dec 2025கீவ், உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் (புதின்) அழிந்து போகட்டும் என்பதுதான்.
-
விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல்
26 Dec 2025திண்டுக்கல், விடுமுறை காரணமாக கொடைக்கானலில் தொடர்ந்து குவியும் சுற்றுலா பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
வங்கதேசத்தில் நியாயமான தேர்தலுக்கு இந்தியா ஆதரவு: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
26 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் நியாயமான தேர்தலை ஆதரிக்கிறது என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயம
-
தமிழகத்தில் ஜனவரி 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
26 Dec 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வங்காள தேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக்கொலை
26 Dec 2025டாக்கா, வங்காள தேசத்தில், மேலும் ஒரு இந்து இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
-
கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து அரசு விளக்கம்
26 Dec 2025புதுடெல்லி, கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தாய்லாந்து விளக்கமளித்துள்ளது.
-
தூத்துக்குடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Dec 2025சென்னை, தூத்துக்குடியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.
-
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிவு
26 Dec 2025மெல்போர்ன், ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது.
-
அதிபர் ட்ரம்ப்பை விரைவில் சந்திப்பேன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
26 Dec 2025கீவ், ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் ஒருநாளும் தோல்வியடையமாட்டோம்.


