எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளதற்கு நாங்கள் தொடங்கிய தர்மயுத்ததிற்கு கிடைத்த முதல் வெற்றி என முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் முடிவு
ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்ற தினகரன் உட்பட அவரது குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் கூட்டாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அதிமுக ( புரட்சித்தலைவி) அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், செம்மலை, மாபா.பாண்டியராஜன், முன்னாள் எம்எல்ஏ, ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம்
காலை 10 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது, இந்த ஆலோசனைக்கு பின்னர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளி்த்தார். அப்போது அவர் கூறியதாவது:- எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி அதை மக்கள் இயக்கமாக வளர்த்தார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் 29 ஆண்டுகளாக பொதுச்செயலாளராக இருந்து பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு அதிமுகவை, மக்களின் இயக்கமாக மாற்றி எம்.ஜி.ஆர். வழியில் கட்சியை நடத்தினார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் அ.தி.மு.க. சென்று விட்டது. இதை தொண்டர்கள் விரும்பவில்லை. எனவே சசிகலா குடும்பத்தை தடுக்கவே தர்மயுத்தம் தொடங்கப்பட்டது. தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இரண்டு பெரும் தலைவர்களின் கொள்கைபடி இந்த கட்சி இயங்க வேண்டும் என்ற அடிப்படை கொள்கையை முன்வைத்து தர்மயுத்தம் நடத்தப்பட்டது.
முதல் வெற்றி
இன்று அ.தி.மு.க.வை இணைப்பதற்கான அந்த தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. சசிகலா குடும்பத்தினரை அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைப்பதாக அவர்கள் முடிவு எடுத்துள்ளனர். எங்கள் தர்மயுத்தம் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, எந்த நோக்கத்திற்காக அறப்போராட்டம் நடந்ததோ அதன்படி தொடர்ந்து மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப, தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொடர்ந்து நடைபெறும்.இந்த இயக்கம் தொண்டர்கள் இயக்கம்தான் என்பதை நாங்கள் நிரூபித்து காட்டுவோம். நாங்கள் இரு தரப்பினரும் பேசி தொண்டர்கள் விருப்பம், மக்கள் விருப்பம் எதுவோ அதை நடைமுறைப்படுத்துவோம். இதற்காக இரு தரப்பினரும் உட்கார்ந்து பேசி நல்ல முடிவு எடுப்போம்.
இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
தொண்டர்கள் உற்சாகம்
அதிமுகவில் இரு அணிகளும் ஒன்றாக இணைவதாக அறிவித்து அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு காலை 8 மணி முதலே ஏராளமான அதிமுக தொண்டர்கள் வருகை தருவதை காணமுடிந்தது. அப்போது ஜெயலலிதா வாழ்க, ஓபிஎஸ் வாழ்க என தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டவாறு இருந்தனர்.
பேச்சுவார்த்தை
அதிமுக அணிகள் இணைவது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர்கள் கொண்ட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பில் நேற்று இதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் மாபா பாண்டியராஜன், செம்மலை உட்பட 4 எம்எல்ஏக்கள், மைத்ரேயன், சுந்தரம் ஆகிய 2 எம்பிக்கள் என 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அமைச்சர்களுடன் இன்று தங்களது முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்குவார் என தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
மீண்டும் ஆலோசனை
ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு குழு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட தி.மு.க.
-
இன்று 77-வது குடியரசு தினம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்
25 Jan 2026சென்னை, இன்று 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்.
-
இன்று 77-வது குடியரசு தினம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
25 Jan 2026புதுடெல்லி, நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை உள்பட நாடு முழுவதும் உச
-
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசனுக்கு சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை
25 Jan 2026சென்னை, மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தின
-
டபுள் என்ஜின் எனக்கூறி ஏமாற்ற முடியாது: டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
25 Jan 2026காஞ்சிபுரம், டபுள் என்ஜின் எனக்கூறி இனி தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்ற முடியாது என்றும் 7-வது முறையாக தமிழகத்தில் தி.மு.க.
-
வங்கதேசத்தில் பயங்கரம்: மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை
25 Jan 2026டாக்கா, வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே இன்று தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
25 Jan 2026தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க.
-
தமிழகத்தில் அன்றும், இன்றும், என்றும் இந்திக்கு இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Jan 2026சென்னை, அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்காகத் தங
-
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு பதக்கங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
25 Jan 2026சென்னை, 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்’ வழங்க மு.க.ஸ்டாலின் ஆ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –27-01-2026
26 Jan 2026 -
நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக்கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Jan 2026புதுடெல்லி, நாட்டின் 77-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் டெல்லியில் ஜல்லிக்கட்டு காளையுடன் அணிவகுத்த தமிழ்நாடு அரசின் வாகனம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் ஜல்லிக்கட்டு காளையுடன் தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும்


