முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா: கலெக்டர் சி.கதிரவன் சான்றிதழ் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 30 மே 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மனவளர்ச்சி குன்றியோருக்காக ( ஆட்டிசம்) இயங்கி வரும் அன்னை அரவிந்தர் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி பயின்ற மாணவ மாணவியர்கள் 2017 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றனர்.

பாராட்டு விழா

இத் தேர்வில் கற்றல் குறைபாடுவுள்ள மாணவர் வி.ஸ்ரீராம், 375 மதிப்பெண்ணுக்கு 275 மதிப்பெண்ணும், ஆட்டிஸசத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஏ.சார்லி, 375 மதிப்பெண்ணுக்கு 266 மதிப்பெண்ணும், மாணவர் ஜே.எஸ்.விமல்ராஜ் 375 மதிப்பெண்ணுக்கு 209 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மனவளர்ச்சி குன்றியோர் பிரிவில் அதிக மதிப்பெண் பெற்றமைக்காக கலெக்டர் சி.கதிரவன் பாராட்டு சான்றிதழ் வழங்கி மாணவர்களை பாராட்டினார். இப் பள்ளியில் 100 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் பெற்று தந்த பள்ளி தாளார் ஆர்.மணிகண்டன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, பள்ளி தாளார் மணிகண்டன், பள்ளி சிறப்பு ஆசிரியை கே.என். லதா ஆகியோர் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து