எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், பாண்டியம்பாளையம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வரும் நாட்டு ரக முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் அவர்கள் செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
நாட்டு ரக முருங்கை
மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் அவர்கள் நாட்டு ரக முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
இலவசமாக வழங்கப்படும்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 29.05.2017 முதல் ஊராட்சி ஒன்றியங்களின் மூலமாக 1,20,000 நாட்டு ரக முருங்கை மரக்கன்றுகள் மற்றும் 1,20,000 பப்பாளி மரக்கன்றுகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக 03.06.2017 முதல் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் மரக்கன்றுகள் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களது பெயரினை பதிவு செய்து ஊராட்சி செயலரை அணுகி இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தினை விரிவுபடுத்தும் வகையில் வரும் ஜூலை 2017-க்குள் 2,00,000 நாட்டுரக முருங்கை மற்றும் 2,00,000 பப்பாளி மரக்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டு ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நாற்றங்கால் தோட்டங்கள் அமைத்து வளர்க்கப்பட்டு வருகிறது.
மரக்கன்றுகள்
மேலும் முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகள் வளர்ப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறுகின்றோம். முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், ப்ரோட்டின் மற்றும் அனைத்து ஊட்டச் சத்துக்களும் உள்ளது. 100 கிராம் முருங்கை இலையில் 75 சதவீதம் இரும்புச் சத்து உள்ளது. இதில் ஈரப்பதம் 75.9 சதவீதம், புரதம் 6.7 சதவீதம், கொழுப்பு 1.7 சதவீதம், தாதுக்கள் 2.3 சதவீதம், கார்போஹைட்ரேட்டுகள் 12.5 சதவீதம், கால்சியம் 400 மி.கி பாஸ்பரஸ் 70 மி.கி உள்ளது. சாதாரண வீடுகளில் காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இம்முருங்கை மரக்கன்றை வளர்க்கும் பொழுது முருங்கை இலை, முருங்கை காய், முருங்கை பூ என அனைத்தையும் நாம் உட்கொள்வதன் மூலம் பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது.
இரண்டு மடங்கு புரோட்டின்
முருங்கை இலையில் பாலாடையை விட இரண்டு மடங்கு புரோட்டின் இருக்கிறது. ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்துள்ளது. வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டை விட 4 மடங்கு வைட்டமின் ஏ உள்ளது, பாலை விட 4 மடங்கு கால்சியம் உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் முருங்கை இலையில் உள்ளது.
வருடம் முழுவதும் பப்பாளி
வருடம் முழுவதும் கிடைக்கும் பப்பாளிப்பழம் இனிப்பான சுவையை தருவதோடு, கரோட்டீன்ஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ.பி,சி, ப்ளாவனாய்ட்ஸ், இரும்புச் சத்து, பொட்டாச்சியம், மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் மற்றும் நார்ச் சத்தினைத் தருகிறது.இருதயம் வலிமை பெறத் தேவையான சத்துக்களையும், ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்புச் சக்தியையும் தருகிறது. நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கக் கூடிய வல்லமை பொருந்திய பப்பாயின் என்ற என்சைமினையும் தருகிறது. இது கண்பார்வைத் திறனை அதிகரிக்கும் தன்மை கொண்டது, கனியாத பப்பாளிப்பழத்தை 250 கிராம் உணவுக்கு முன் தொடர்ச்சியாக மூன்று மாத காலம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து ஆரம்ப நிலை சர்க்கரை நோய் முற்றிலும் நீங்கி விடும்.
உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ.சி. மற்றும் ஈ சத்துக்கள் உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை வெளியேற்ற உதவுகின்றன. இதனால் கொழுப்பு உடலில் சேர்வதைத் தடுத்து ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேராமல் தடுத்து மாரடைப்பு வராமலும், இருதயம் பாதிப்பில்லாமல் இயங்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின்கள் பீட்டா கரோட்டீன் போன்றவை நுரையீரல், இரைப்பை, கருப்பைபுற்று நோய் ஏற்படுவதை தடுக்கின்றது. இது உடலில் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து, சளி, காய்ச்சல் வராமல் தடுக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளிக்காயை தோல் நீக்கி சாப்பிடுவதால் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்கும்.
ஆர்வம் உள்ளவர்கள்
இத்தனை நன்மைகள் வழங்கக்கூடிய நாட்டுரக முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இலவசமாகப் பெற்று, தங்களது வீடுகளில் வளர்த்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
25 யூனிட் வரை
மேலும் அரசு புறம்போக்கு ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண், சவுடு மண், கரம்பை மண் மற்றும் சரல் போன்ற சிறு கனிமங்களை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்துவதற்கு எவ்வித கட்டமணமுமின்றி பொதுமக்கள் பயன்படுத்தவும், அரசுக்கு கட்டணம் செலுத்தி பிற பயன்பாடுகளுக்காக பயன்படுத்தவும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி, அரசு புறம்போக்கு ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண், சவுடு மண், கரம்பை மண் மற்றும் சரல் போன்ற சிறு கனிமங்களை நஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயி ஒருவருக்கு வண்டல்மண் ஒரு ஏக்கர் நஞ்சை உள்ள விவசாயிக்கு 25 யூனிட் வரையும், ஒரு ஏக்கர் புஞ்சை உள்ள விவசாயிக்கு 30 யூனிட் வரையும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்திரவிட்டுள்ளார்கள்.
14 ஊராட்சியில்
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,030 குளங்களில் 539 குளங்களுக்கு வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட குளங்கள் மூலம் சுமார் 6,857 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அனுமதி வழங்கப்பட்ட பல்வேறு குளங்களில் நசியனூர் பேரூராட்சிக்குட்பட்ட 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுவலசு குளம் மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருவாச்சி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கருக்குமடைகுளம் ஆகிய குளங்களில் வண்டல் மண் எடுக்கும் பணியை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட தி.மு.க.
-
இன்று 77-வது குடியரசு தினம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்
25 Jan 2026சென்னை, இன்று 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்.
-
இன்று 77-வது குடியரசு தினம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
25 Jan 2026புதுடெல்லி, நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை உள்பட நாடு முழுவதும் உச
-
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசனுக்கு சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை
25 Jan 2026சென்னை, மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தின
-
டபுள் என்ஜின் எனக்கூறி ஏமாற்ற முடியாது: டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
25 Jan 2026காஞ்சிபுரம், டபுள் என்ஜின் எனக்கூறி இனி தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்ற முடியாது என்றும் 7-வது முறையாக தமிழகத்தில் தி.மு.க.
-
வங்கதேசத்தில் பயங்கரம்: மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை
25 Jan 2026டாக்கா, வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே இன்று தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
25 Jan 2026தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க.
-
தமிழகத்தில் அன்றும், இன்றும், என்றும் இந்திக்கு இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Jan 2026சென்னை, அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்காகத் தங
-
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு பதக்கங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
25 Jan 2026சென்னை, 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்’ வழங்க மு.க.ஸ்டாலின் ஆ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –27-01-2026
26 Jan 2026 -
நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக்கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Jan 2026புதுடெல்லி, நாட்டின் 77-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் டெல்லியில் ஜல்லிக்கட்டு காளையுடன் அணிவகுத்த தமிழ்நாடு அரசின் வாகனம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் ஜல்லிக்கட்டு காளையுடன் தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும்
-
திருப்பூர் கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்: தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
26 Jan 2026சென்னை, குடியரசு நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
-
தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
26 Jan 2026சென்னை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் இன்று (ஜன. 27) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கவர்னரின் தேநீர் விருந்து: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
-
வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம்: தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Jan 2026தஞ்சாவூர், தேர்தல் பணியாற்ற நாம் உறுதியேற்போம் என்று தஞ்சையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்றும் அவர் தெ
-
டெல்லி குடியரசு தின விழாவில் 900 கி.மீ. வேகத்தில் பறந்து போர் விமானங்கள் சாகசம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் பறந்து இந்திய போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.
-
இனி பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் புதிய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
26 Jan 2026புதுடெல்லி, பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
அரசியலமைப்பின் மாண்பை காக்க உறுதியேற்போம்: விஜய்
26 Jan 2026சென்னை, அரசியலமைப்பின் மாண்பைக் காக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.



