முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது உயர்மட்ட குழுவை மாற்றி அமைக்க அன்னா ஹசாரே திட்டம்

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

ராலிகான்சித்தி, நவ.- 8 - கடுமையான சர்ச்சையில் சிக்கியுள்ள தனது உயர் மட்டக்குழுவை மாற்றி அமைக்கப்போவதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக பிரச்சார இயக்கம் நடத்திவரும் பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே தனது சொந்த கிராமத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உள்ள சிலர் தனது குழுவை உடைக்க சதி செய்து வருவதாக குற்றம்சாட்டினார். லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார். அன்னா ஹசாரேவை அவரது குழுவினர் தவறான முறையில் வழி நடத்திச் செல்வதாகவும்  தங்களது சொந்த நோக்கங்களுக்காக ஹசாரேவை அவர்கள் பலிகடா ஆக்கி வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து அன்னா ஹசாரேவிடம் கேட்டதற்கு, தனது உயர் மட்டக்குழுவை மாற்றி அமைக்க  திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள கிரண் பேடி, அர்விந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள்  நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எனவே இந்த உயர் மட்டக்குழுவை மாற்றி அமைக்க ஹசாரே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தனது உயர் மட்டக்குழுவில் தலித்துகள்,  முஸ்லீம்கள், ஆதிவாசிகள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் இடம் பெறச்செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லையே என்று யாரும் புகார் சொல்லாத அளவுக்கு உயர் மட்டக்குழு மாற்றி அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தனது குழுவில் இளைஞர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றும் குழுவில் இளைஞர்களின் பலம் இருப்பது மிகவும் அவசியம் என்றும்  சமுதாயத்தின் பல்வேறு மட்டங்களிலும் உள்ள இளைஞர்கள் இக்குழுவில் இடம் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார். உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டபோது தங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லையே என்று பலரும்  புகார் தெரிவித்ததாகவும் அன்னா ஹசாரே கூறினார். தான் அமைத்த உயர் மட்டக்குழு இரண்டரை  மாதங்களாக இருந்து வருகிறது. ஆனால் நான் இனிமேல் அமைக்க உள்ள உயர் மட்டக்குழு நீண்ட  காலத்திற்கு நீடித்து இருக்கும் என்றும் அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago