முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய குடியரசு தின விழாவில் தாய்லாந்து பெண் பிரதமர் பங்கேற்பு

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ. - 8 - இந்திய குடியரசு தின விழாவில் தாய்லாந்து பெண் பிரதமர் இங்லக்ஜினாவத்ரா பங்கேற்கிறார்.  தாய்லாந்து பிரதமராக இங்லக்ஜினாவத்ரா கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார். இவர் தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர் ஆவார். இவர் வரும் ஜனவரி 26 ம் தேதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக இந்திய குடியரசு தின விழாவில் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். 2010 ம் ஆண்டு தென் கொரிய அதிபர் லீ மியூம்பக்கும், 2011 ம் ஆண்டு இந்தோனேசிய அதிபர் சுசிலோவும் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் தாய்லாந்து பெண் பிரதமர் ஜினாவத்ரா கலந்து கொள்கிறார். குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மூன்றாவது தென் கிழக்கு ஆசிய தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக இந்தியாவுக்கும், தாய்லாந்துக்கும் இடையே அரசியல், வர்த்தகம், சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2007 ம் ஆண்டு 60 வது ஆண்டு தூதரக நட்புறவை இரு நாடுகளும் கொண்டாடின என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago