Idhayam Matrimony

எடியூரப்பாவுக்கு வழக்கிலும் ஜாமீன்: சிறையில் இருந்து விடுதலை

செவ்வாய்க்கிழமை, 8 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,நவ.- 9 - முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான இரண்டாவது வழக்கிலும் கர்நாடக மாநில ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது. இதனயொட்டி அவர் நேற்றுமாலையில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக தெரிகிறது.  கர்நாடக மாநில பாரதிய ஜனதா முதல்வராக இருந்த எடியூரப்பா,சுரங்க ஊழலில் ஈடுபட்டிருப்பதாக அவர் மீது லோக் ஆயுக்தா கோர்ட்டு குற்றஞ்சாட்டியது. இதனையொட்டி அவர் கடந்த மாதம் ஜூலை மாதம் 31-ம் தேதி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் முதல்வர் எடியூரப்பா மீது இரண்டு நிலப்பேர ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனையொட்டி எடியூரப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் அவர் தமக்கு ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் இன்னொரு வழக்கும் அவர் மீது இருப்பதால் சிறையில் இருந்து விடுதலையாகவில்லை. இந்த நிலையில் மற்றொர நில ஊழல் வழக்கில் முதல்வர் எடியூரப்பாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது. எடியூரப்பாவுடன் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் கிருஷ்ணய்யா ஷெட்டிக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது. இதுகுறித்து எடியூரப்பாவின் வழக்கறிஞர் சந்தீப் கூறுகையல், முதல்வர் எடியூர்ப்பாவுக்கு எதிரிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று பிரபல வழக்கறிஞர் சந்தீப் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago