எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வெள்ளாடு வளர்ப்பு மற்ற கால்நடைகள் வளர்ப்பதைக் காட்டிலும் அதிக இலாபம் தரும் தொழிலாகும். மேலும், ஊரக வேலைவாய்ப்பை உருவாக்கி வறுமை ஒழிப்பிற்கு உறுதுணையாக விளங்குவதில் வெள்ளாடு சிறந்து விளங்குகிறது.
இந்தியாவில் வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக ஆடு வளர்ப்புத் தொழில் விளங்குகிறது. ஐரோப்பிய நாடுகளில் கைக்குழந்தைகளுக்கு பால் தரும் “செவிலித் தாய்” என்று அழைக்கப்படுகிறது. வெள்ளாடு வளர்ப்பதற்கு மிகக் குறைந்த செலவே ஆகும். பசு, எருமைகள் வளர்க்க முடியாதவர்கள் கூட வெள்ளாடுகள் வளர்த்து வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை அதிகப்படுத்தலாம். ஆடுகளைச் சாலை ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும், மலைச்சரிவுகளிலும் மேயவிட்டு வளர்க்கலாம்.
இதற்காக அதிக இடமோ, அதிக செலவோ தேவையில்லை. எல்லா வகையான புல், பூண்டுகளையும், இலைதழைகளையும், முலிகை கலந்த செடிகொடிகளையும் மற்ற கால்நடைகள் உண்ணாத பொருட்களைக் கூட உண்டு உயிர் வாழ கூடியவை. வெள்ளாடுகள் நம் நாட்டில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கும் வெள்ளாடு வளர்ப்பு ஒரு நிரந்தர வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக விளங்குவதால் வெள்ளாடுகள் ஏழைகளின் நடமாடும் வங்கியாகக் கருதப்படுகிறன.
வெள்ளாட்டின் நன்மைகள்
• குறைவான முதலீடு, குறைந்த செலவில் தீவனம் கொடுத்து வளர்க்கவல்லது
• அதிக உற்பத்தி மற்றும் ஈனும் திறன், அதிக தீவன மாற்றுத்திறன் கொண்டவை.
• இறைச்சி அனைத்து தரப்பினராலும் உண்ணக்கூடியது
• கறிக்காகவும், பாலுக்காகவும், தோலுக்காகவும், உரத்திற்காகவும் வளர்க்கலாம்.
• அதிகமான அளவில் குட்டிகளை ஈனும் திறன் கொண்டவை. ஒரு ஈற்றில் 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும்
• இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டிகளை ஈனும்
• வெள்ளாட்டு பால் சளி மற்றும் சுவாச கோளாறுகளை குணப்படுத்தும் மருத்துவ தன்மை கொண்டது.
வெள்ளாட்டு இனங்களைத் தேர்வு செய்தல்
இனங்களைத் தேர்வு செய்யும் போது எந்த முறையில் வெள்ளாடு வளர்ப்பு செய்கிறோம் என்பதனை கருத்தில் கொண்டு பண்ணை ஆரம்பிக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் இனங்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
அதிக பால் கொடுக்கும் இனங்கள்; : ஜமுனாபாரி, பார்பாரி, பீட்டல், தலைச்சேரி
அதிக இறைச்சி தரக்கூடியவை : ஜமுனாபாரி, போயர், சிரோகி
அதிக குட்டிகள் ஈனக்கூடியவை : தலைச்சேரி, பார்பாரி
தமிழ்நாட்டில் கொட்டில் முறை வளர்ப்பில் இறைச்சி உற்பத்தியை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் பண்ணைக்கு போயர், ஜமுனாபாரி, தலைச்சேரி, சிரோகி ஆகிய இனங்கள் ஏற்றவை.
இனப்பெருக்க பராமரிப்பு
வெள்ளாடு வளர்ப்பில் இனப்பெருக்க பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். கொட்டில் முறையில் வெள்ளாடு வளர்க்க விரும்புவோர் நல்லதோர் இனச் சேர்க்கைக் கொள்கையைக் கடைப்பிடித்தல் அவசியம். ஏனெனில் அப்போதுதான் தரமான குட்டிகளை உற்பத்தி செய்து வருவாய் ஈட்ட முடியும்.
வெள்ளாடுகளின் பெட்டை ஆடுகள் 6-8 மாதத்திலும், கிடாக்கள் 8-10 மாதத்திலும் பருவம் அடையும். ஆனால் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற தகுதியைப் பெட்டையாடுகள் 12-15 மாதத்திலும், கிடாக்கள் 18 மாதத்திலும் அடைகின்றன. பொதுவாக வெள்ளாடுகள் மே, ஜனவரி மாதங்களில் சினை தருணத்திற்கு வரும். எனினும் ஆண்டின் எத்தருணத்திலும் இனவிருத்தியாவதுண்டு. பெட்டையாடுகள் 19-21 நாட்களுக்கு ஒரு முறை சினைப்பருவத்திற்கு வருகின்றன.
சினைப்பருவம் 24-28 மணி நேரம் நீடித்திருக்கும். பெட்டைகளைச் சினைப்பருவ அறிகுறிகள் ஆரம்பித்த பிறகு 12 முதல் 24 மணி நேரத்திற்குள் நல்ல தரமான கிடாவுடன் இனச்சேர்க்கை செய்ய வேண்டும். இனப்பெருக்கத்திற்காக சுமார் 20 முதல் 30 ஆடுகளுக்கு ஒரு பொலிகிடா போதுமானது. பெரிய மந்தையாக இருப்பின் இதே விகிதத்தில் அதிக கிடாக்கள் தேவைப்படும். இனச்சேர்க்கை செய்த 21 நாட்களுக்கு பிறகு பெட்டைகளில் சினைப்பருவ அறிகுறிகள் தென்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். இவ்வாறு பருவத்திற்கு வரும் சினைப்பிடிக்காத ஆடுகளை மீண்டும் கிடாவுடன் சேர்த்து இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.
சினைப்பருவ அறிகுறிகள்
• சினைப்பருத்திலுள்ள ஆடுகள் அடிக்கடி கத்திக் கொண்டு நிதானமின்றியும், வாலை ஆட்டிக் கொண்டும், தீவனத்தில் விருப்பம் இல்லாமலும் காணப்படும்.
• மற்ற ஆடுகள் மேல் தாவும், பிற ஆடுகளைத் தம் மேல் தாவ அனுமதிக்கும்.
• பால் உற்பத்தி அளவு குறையும்
• இனப்பெருக்க பிறப்புறுப்புத் தடித்துக் காணப்படும். அதிலிருந்து வழவழப்பான திரவம் வெளிப்படும்.
• வெள்ளாடுகள் சினைத் தருணத்தை மிகுந்த வெளிப்படையாகக் காட்டாது. எனவே, பொலி கிடாவைக் காலை, மாலை அருகில் விட்டு சினைத் தருணத்தை அறிந்து, தக்கபடி இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.
ஆடுகளின் சினைக்காலம் 145 முதல் 150 நாட்களாகும். சினையுற்ற ஆடுகள் கருவூட்டல் செய்த இரண்டு மாதத்தில் வயிறு பெரிதாக காணப்படும். காலை நேரங்களில் சினை ஆடுகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியம். ஏனெனில் காலை நேரத்தில் வெறும் வயிராக இருக்கும் பொழுது சினையில்லா ஆடுகள் வயிறு ஒட்டியும், சினையான ஆடுகளின் வயிறு பெரிதாகவும் காணப்படும். அதோடு வயிற்றின் கீழ்ப்பகுதியின் ஒரு புறத்தில் ஒரு கையை வைத்துக் கொண்டு மறுபுறம் இருந்து மறு கையின் உதவியால் மென்மையாக அழுத்திப் பார்ப்பதன் மூலம் குட்டியின் இருப்புத் தன்மையை அறிந்து கொள்ளலாம்.
குட்டி ஈனுதல்
குட்டி ஈனும் தருணத்தில் ஆடு அமைதியுற்று கத்திக் கொண்டிருப்பதுடன் வயிறு சுருங்கி விரிதல், அடிக்கடி உட்கார்ந்து எழுதல், மூச்சுத் திணறல், தரையை காலால் பிராண்டுதல் போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்ட ஒரு மணி நேரத்தில் குட்டியை ஈன்றுவிடும். ஈனும் குட்டியானது முன்னங்கால்கள் இரண்டையும் நீட்டி, தலையை காலின் மேல் வைத்த வண்ணம் வெளியில் வரும். இரண்டு குட்டிகளை ஈனும் நேரமானது சற்றே வேறுபடும். அதாவது முதலாவது குட்டிக்கும், இரண்டாவது குட்டிக்கும் இடையே உள்ள ஈனும் நேரமானது சில நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் ஆகலாம். மேலும், தாமதம் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை செய்து கொள்வது அவசியம்.
குட்டி ஈன்றபின் நஞ்சுக் கொடியானது 30 நிமிடம் முதல் 8 மணி நேரத்திற்குள்ளாக வெளித்தள்ளப்பட்டுவிடும். குட்டி ஈன்ற ஆடுகளுக்கு சரியான முறையில் அடர் தீவனமும், பசுந்தீவனமும் கொடுப்பதன் மூலம் அதன் கருப்பை சுருங்கி 45 நாட்களில் மீண்டும் பருவ சுழற்சி ஏற்படும். இல்லையெனில் 7 முதல் 9 மாதங்களுக்கு பின்பே பருவச் சுழற்சி ஏற்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2025.
09 Jul 2025 -
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
கணவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார்: ‛கல்லுக்குள் ஈரம்'' நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
09 Jul 2025சென்னை : கணவர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரை அடுத்து 1980-களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
-
ராஜஸ்தானில் பயங்கரம்: இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து - இருவர் பலி
09 Jul 2025ஜெய்பூர் : ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.