எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுவை கவர்னர் கிரன்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
மோதல் போக்கு
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மற்ற மாநிலங்களில் உள்ள கவர்னரை விடசற்று கூடுதலாக அதிகாரம் உள்ளது. புதுவை கவர்னராக கிரன்பேடி வந்தபிறகு இதை காரணமாக வைத்து அவர் அன்றாட அலுவல் பணிகளிலும் தலையிட்டு வருகிறார். அதிகாரிகளுக்கு அவரே உத்தரவுகளை பிறப்பிக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது கவர்னர் அன்றாட அரசு பணிகளில் தலையிடுவதா? என்று கூறி கவர்னருருக்கு முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் கவர்னருக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இரு தரப்பினரும் மத்திய அரசிடம் இது தொடர்பாக புகாரும் தெரிவித்துள்ளனர். ஆனால்மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஒவ்வொரு விஷயத்திலும் கவர்னரும்,முதல்வரும மோதிக் கொள்ளவது தொடர் கதையாக மாறி உள்ளது.
கவர்னர் அதிரடி
இந்த நிலையில் முதல்வருக்கான நிதி அதிகாரத்தை கவர்னர் திடீரென குறைத்துள்ளார். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால்இங்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இதன்படி கவர்னர் ரூ.50 கோடி வரை திட்டங்களுக்குநிதி ஒதுக்கீடு செய்ய முடியும். அதற்குமேல் என்றால் மத்திய உள்துறையின் அனுமதி பெற வேண்டும். முதல்வருக்கு ரூ.10 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்ய அதிகாரம் உள்ளது. துறை செயலாளருக்கு ரூ.2 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்ய அதிகாரம் உள்ளது. தற்போது முதல்வரின்நிதி ஒதுக்கீடு அதிகாரத்தை கவர்னர் ரத்து செய்து உத்தரவிட்டுளார். இந்த உத்தரவு தலைமை செயலாளர் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. அவர் கவர்னர் உத்தரவை மத்திய உள்துறை பார்வைக்கு அனுப்பி உள்ளார். இந்த நிலையில் தன்னுடைய அதிகாரத்தை பறிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்றுமுதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உரிமை இல்லை
ஒருவருக்கு மத்திய அரசு கொடுத்த அதிகாரத்தை வைத்து அடுத்தவர்களின் அதிகாரத்தை பறிக்க உரிமை இல்லை. கவர்னரின் செயல்வாடு தொடர்பாக நான் மத்திய உள்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளேன். கவர்னரின் உத்தரவு செல்லாது என்று தலைமை செயலாளரும் மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதி உள்ளார். உள்துறை அமைச்சகம் எங்கள் கடிதங்களை ஏற்றுக் கொண்டது. கவர்னர், முதல்வருக்கு என்று தனித்தனி அதிகாரம் உள்ளது. கவர்னருக்கு நேரடி அதிகாரம் இல்லாததால் எனக்குள்ள அதிகாரத்திற்குள் தலையிடுகின்றார். அவரது உத்தரவு செல்லாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் எப்போதும் போல நிதி நிர்வாகத்தை நடத்துவோம். கவர்னர் தவறான தகவல்களால் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025