முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் உபாதைகளுக்கு உடனடியாக பலன் தரும் ஒரு நிமிடக் குறிப்புகள்

திங்கட்கிழமை, 31 ஜூலை 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

நாம் சந்தோஷமாக வாழ நமது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நமது உடல் பலவிதமான அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த ஒன்றாகும். சில நேரங்களில் நாம் செய்யும் மிகச் சிறிய செயல்கள் உடலில் அற்புதத்தை நிகழ்த்திவிடும். இது நாம் சாப்பிடும் மாத்திரைகளை விட நல்ல வேலை செய்யும்.

ஏன் நாம் உடல் நலம் பாதிக்கப்பட்டால் கூட எப்பொழுதும் மாத்திரைகளை எடுப்பதை விட வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அதை சரிபண்ணி விடுவதும் உண்டு அல்லவா? இதனால் மாத்திரைகளின் எண்ணிக்கையும் குறையும். ஒரு உதாரணமாக வைத்து கொள்வோம் நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் ஒரு நிழல் வாய்ந்த பசுமையான மரத்தடியில் சிறிது நேரம் உட்கார்ந்தால் போதும் உங்கள் மனஅழுத்தம் காணாமல் போகும்.

இதற்கு காரணம் அந்த பசுமையான இலைகளால் உங்கள் மனதில் ஏற்படும் நேர் மறை எண்ணங்கள், நல்ல காற்று, மற்றும் குறைந்த சூரிய ஒளி இவைகள் தான். எனவே இந்த மாதிரி சில ட்ரிக்ஸ்கள் உங்களது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது . அப்படிப்பட்ட சில ட்ரிக்ஸ் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

1: உங்களுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு இருந்தால் வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி உங்கள் தலையணையின் இரு பக்கமும் வைத்து உறங்குங்கள். காலையில் எழுந்து பார்த்தால் உங்கள் மூக்கடைப்பு காணாமல் போகும்.

2: கொசு கடித்த இடம் அரிக்கிறதா அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க. கொசு கடித்த இடத்தில் சில துளிகள் டியோடரண்ட்டை ஸ்பிரே பண்ணினால் போதும் அரிப்பு நின்று விடும்.

3: என்னங்க என்ன பண்ணினாலும் தூக்கம் வரமாட்டிக்குதா? ரொம்ப அவதிப்படுறிங்களா? இருக்கவே இருக்கு குளிர்ந்த நீர் குளியல். ஆமாங்க இனி தினமும் தூங்குவதற்கு முன் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு படுங்க உங்கள் உடல் வெப்பநிலை குறைந்து அசந்து தூங்குவிங்கள்.

மேலும் இந்த ட்ரிக் உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கும் மற்றும் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும்.

4: கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வருகிறதா, உங்கள் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ட்ரிக் நல்ல பயன் தரும். உங்கள் கண்களை நன்றாக திறந்து வைத்து இமைப்பதை சில நிமிடங்கள் நிறுத்தி வையுங்கள் கண்ணீர் வருவது நின்று விடும்.

5: ஆல்கஹால் குடித்த பிறகு தீவிர தலைவலி ஏற்படுகிறதா, உடனே ஒரு பாத்திரத்தில் நிறைய ஜஸ் கட்டிகள் மற்றும் குளிர்ந்த நீர் ஊற்றி அதில் கைகளை சிறிது நேரம் வைத்து இருந்தால் உங்கள் தலைவலி பறந்து போய்விடும்.

6: என்ன மாணவர்களே படிச்சது எல்லாம் மறந்து போகுதா? இந்தாங்க உங்களுக்காக ஒரு ட்ரிக். மாணவர்கள் தங்களது புதிய பாடங்கள் மற்றும் புரியாத பாடங்கள் போன்றவற்றை காலையில் எழுந்து படிப்பதோடு இரவில் தூங்குவதற்கு முன் அதை ஒரு முறை ஞாபகப்படுத்தி பார்த்துக் கொண்டால் உங்கள் மூளையில் பதிந்து விடும். எனவே எப்பொழுதும் மறக்காது.

7: காலையில் எழுந்தும் தூக்க கலக்கம் போகாமல் சோம்பேறியா இருக்கிறதா அப்போ இத ட்ரை பண்ணுங்க. உங்கள் வலது காலை மட்டும் தரையில் வைத்து பாதம் தரையை தொட வேண்டும். அப்படி செய்தால் உங்கள் மூளை சுறுசுறுப்பாக மாறி தூக்கம் போய்விடும். ட்ரிக்

8: உங்களுக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வருகிறதா, அந்த சமயத்தில் வேறு வித உணர்வுகளை ஏற்படுத்தி கொண்டால் அழுத்தம் குறைந்து சிறுநீர் கழிக்கும் உணர்வு மாறிவிடும். பிறகு பக்கத்தில் இருக்கும் வாஷ் ரூம்யை நாடிக் கொள்ளுங்கள். என்னங்க இந்த அட்டகாசமான ட்ரிக்ஸ்யை பயன்படுத்தி பலன் பெறுங்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து