Idhayam Matrimony

மயிலாடுதுறை பகுதியில் 48 கிராமங்களில் டெங்கு விழிப்புணர்வு ரதத்தில் சென்று அமைச்சர் ஒ.எஸ்.மணியன் நிலவேம்புக் குடிநீர் வழங்கினார்

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி பேருந்து நிறுத்தத்திலிருந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது,

நிலவேம்பு கசாயம்

"டெங்குகாய்ச்;சல் தடுப்பு தொடர்பாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. டெங்கு தடுப்பு பணிக்காக கூடுதலாக நான்காயிரம் மருத்துவர்களையும், நாற்பது ஆயிரம் மஸ்தூர்ளையும் அரசு நியமித்துள்ளது. பொது மக்களாகிய நீங்கள் காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை நாடி சிகிச்சை பெற வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளன.

பொதுமக்கள் தங்கள் வீட்டையும் மற்றும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தார். இந்த டெங்கு விழிப்புணர்வு வாகனத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மயலாடுதுறை வருவாய் கோட்டப் பகுதிகளான செம்பனார்கோவில் ஒன்றியம், தரங்கம்பாடி, திருக்கடையூர், ஆக்கூர் சந்திப்பு, ஆக்கூர், செம்பனார்கோவில், பரசலூர், மேமாத்தூர், திருவிளையாட்டம், அரும்பாக்கம், கொத்தங்குடி, குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர், மங்கநல்லூர், மேலமங்கநல்லூர்,

கோமல், தேரெழுந்தூப், குத்தாலம், சேத்திரபாலபுரம், மயிலாடுதுறை ஒன்றியம் மல்லியம், மூவலூர், மாப்படுகை, மயிலாடுதுறை ரயில் நிலையம், கூறைநாடு, மயிலாடுதுறை பேருந்து நிpலையம், திருவிழந்தூர், பல்லவராயன்பேட்டை, நீடுர், கடுவன்குடி, வில்லியநல்லூர், நடராஜபுரம், தலைஞாயிறு, மானந்திருவாசல், சீர்காழி ஒன்றியம் திருப்புங்கூர், வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், சீர்காழி பேருந்து நிலையம், சீர்காழி கடைவீதி, விளந்திடசமுத்திரம், கொள்ளிடம் ஒன்றியம் அரசூர், எருக்கூர், புத்தூர், தைக்கால், கொள்ளிடம் ஆகிய ஊர்களில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களும், மாவட்ட கலெக்டர் அவர்களும் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம், டெங்கு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பவுன்ராஜ்(பூம்புகார்), வி.வி.பாரதி(சீர்காழி), வி.ராதாகிருஷ்ணன்(மயிலாடுதுறை), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், துணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்) மரு.செல்வகுமார், வருவாய் கோட்டாச்சியர் கோ.தேன்மொழி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் மதுமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசுஅலுவலர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து