Idhayam Matrimony

புதிய தொழில் தொடங்க 3 நபர்களுக்கு காசோலைகள்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      நீலகிரி
Image Unavailable

புதிய தொழில் தொடங்க 3 நபர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.9 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

புதிய தொழில்கள்

ஊட்டி ரோஜா பூங்கா அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்து பேசியதாவது.

தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வேலையில்லா பிரச்சனையை மட்டுப்படுத்தவும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியோர் குறிப்பாக படித்த வேலையில்லா இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பெற வகுத்த திட்டமாகும். தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத ஒரு சுற்றுப்புற சூழல் நம் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.இந்த மாவட்டத்திற்கு வருமானம் தரக்கூடிய புதிய தொழிலை  இளைஞர்கள் தேர்ந்தெடுத்து தொழில் தொடங்க வேண்டும். நம் மாவட்டம் சுற்றுலா தலமாக உள்ளதால் இங்கு கிடைக்கக்கூடிய தாவரங்கள், பூக்கள், இலைகளை சேகரித்து புதியவகை ஆயில் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரலாம்.

அதன் மூலம் வருமானத்தை அதிகரிக்கச் செய்து இன்றைய இளைஞர்கள் நாளைய தொழிலதிபர்களாக ஆகலாம். தொழில் தொடங்க உள்ள இளைஞர்களுக்கு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். எனவே இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி இளைஞர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

சான்றிதழ்கள்

தொடர்ந்து கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி பெற்ற 28 நபர்களுக்கு சான்றிகழ்களும், புதிதாக தொழில் தொடங்குவதற்கு தலா ரூ.3 லட்சம் வீதம் 3 நபர்களுக்கு ரூ.9 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

முகாமில் முன்னோடி வங்கி மேலாளர் அறிவழகன் மற்றும் வங்கி மேலாளர்கள், புதிய தொழில் முனைவோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து