முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத்தில் இந்திய-அமெரிக்க சுகாதார மாநாடு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

நியூயார்க்,டிச.9 - ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் இந்திய-அமெரிக்க சுகாதார பராமரிப்பு மாநாடு வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி ஆரம்பமாகி 3 நாட்கள் நடக்கிறது. அமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்தவர்கள் டாக்டர் படிப்பு படிக்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து அமெரிக்காவில் உள்ள இந்தியாவை பூர்வீகமாக கொண்ட டாக்டர்கள் சங்கம் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி அன்று ஐதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் சுகாதார மாநாடு ஆரம்பமாகிறது. மாநாடு 3 நாட்கள் நடைபெறும். இதற்கு முன்பு இதே சங்கம் சார்பாக 2 சுகாதார மாநாடுகள் இந்தியாவில் நடந்துள்ளது. ஒன்று புதுடெல்லியிலும் மற்றொன்று ஜெய்பூரிலும் நடந்தது. ஆனால் உலகலாவிய இந்த சுகாதார மாநாட்டை தென்னிந்தியாவில் நடத்துவது முதல் தடவையாகும். மாநாட்டின் போது இடைவெளியின்போது வருகை தந்திருப்பவர்களை மகிழ்விக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளும் நடக்கும் என்று சங்க பெண் பிரதிநிதி டாக்டர் சுனிதா கனுமிரி தெரிவித்தார். இவரும் ஆந்திராவை சேர்ந்தவர்தான். மாநாட்டை முதல்வர் கிரண்குமார் ரெட்டி தொடங்கிவைக்கிறார். அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். உலகம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட டாக்டர்களும் பங்கேற்கிறார்கள் மாநாட்டில் போது தென்னிந்திய மக்களை அதிகம் பாதிக்கும் காசநோய்,சர்க்கரை  நோய், இருதய நோய் சம்பந்தமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் மாநாடு பிரதிநிதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago