முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென அரசு நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கலை நிகழ்வுகள்: கலெக்டர் சி.கதிரவன், துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் (11.12.2017 ) நடைபெற்றது. இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்வசதி, பட்டா வேண்டியும், கல்வி உதவித் தொகை, ஓய்வூதியத் தொகை, இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டி, வேண்டியும் மற்றும் சாலை வசதி வேண்டியும், மின் இணைப்;பு, வீட்டுமனைப்பட்டா, பல்வேறு கோரிக்கைகள் உள்ளிட்ட மொத்தம் 229- மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

கலைநிகழ்ச்சிகள்

தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென அரசு நலத் திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் - மாவட்ட அளவில் கலை நிகழ்வுகள் மற்றும் தெரு முனை நாடகங்கள் நடத்துதல் முகாமை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் கிருஷ்ணகிரி கலெக்டர் சி.கதிரவன், துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென அரசு நலத் திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக மாவட்ட அளவில் கலை நிகழ்வுகள் மற்றும் தெரு முனை நாடகங்கள் 10 வட்டாரங்களில் 11.12.2017 முதல் 13.11.2017 வரை 3 நாட்கள் நடத்தி மாற்றுத் திறனாளிகளிகளுக்கான திட்டங்கள் குறித்தும் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சமூக நலம் மற்றும் சத்துணைவுத் திட்டத்துறை, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆதார் அட்டை சம்பந்தப்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்தில் பெறுதல், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெறுதல் மற்றும் கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்டும் திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக மாவட்ட அளவில் கலை நிகழ்வுகள் மற்றும் தெரு முனை நாடகங்கள் நடத்துதல் முகாமை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் துவக்கி வைத்து 32 மாற்றுத் திறனாளி நபர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை களை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.சாந்தி, தனி துணை கலெக்டர் சந்தியா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், உதவி ஆணையர் ( ஆயம்) கீதாராணி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து