முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசி மயக்கத்தில் கிடந்த மூதாட்டி மீட்பு தி.மலை கிரிவலப் பாதையில் சொந்தங்களே தவிக்க விட்டு சென்ற கொடுமை

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் அருகே யோகிராம்சூரத்குமார் நினைவு இல்லம் அமைந்துள்ள சாலையில் ஆதரவற்ற நிலையில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த சில நாட்களாக படுத்துக் கிடந்தார். அவரை உலக மக்கள் சேவை மைய நிர்வாகி மணிமாறன் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

மூதாட்டி

இதுகுறித்து அவர் கூறும்போது பசியால் மூதாட்டியால் சரியாக பேசமுடியவில்லை. அவரிடம் விசாரித்ததில் அவரது பெயர் உண்ணாமலை என்றும் போளூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிரிவலப் பாதையில் கொண்டு வந்து அவரது குடும்பத்தினர் விட்டுச் சென்றுள்ளனர். தண்ணீர் மற்றும் உணவு இல்லாததால் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த வழியாக சென்றபோது அவரது நிலையை கண்டு அதிர்ச்சிக்குள்ளானேன். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளேன். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறிதது தொலைபேசி மூலம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன்.

அவரும் அரசு மருத்துவ கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்குமாறு உடனடியாக கேட்டுக்கொண்டார். மூதாட்டியின் விவரம் தெரியவில்லை. போளூர் என்று கூறுவதால் அந்த பகுதியில் அவரது புகைப்படததை கொண்டு காவல்துறை மற்றும் தொண்டு உள்ளம் கொண்டவர்கள் உதவியுடன் அடையாளம் காணவேண்டும் என்றார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து