முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வல்லநாடு மணக்கரை மலைபார்வதியம்மன் கோவில் கொடை விழா

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      தூத்துக்குடி

வல்லநாடு அருகேயுள்ள மணக்கரை மலைபார்வதியம்மன் கோவில் கொடை நடைபெற்றது. விழாவினைத்தொடர்ந்து மாட்டுவண்டி, குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது.

 கோவில் கொடை 

 மணக்கரை முதல் வல்லநாடு வரை நடந்த பெரிய மாட்டுவண்டிப்போட்டியில் 10வண்டிகள் பங்கேற்றன. போட்டியின் முடிவில் முதல் இடத்தை தட்டிச்சென்ற மருகால்குறிச்சி வண்டிக்கு ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வைகுண்டபாண்டியன் முதல் பரிசாக ரூ.20ஆயிரம் வழங்கினார். 2ம் இடம் பெற்றவருக்கு ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜூம், 3ம்இடம் பெற்றவருக்கு வடக்கு காரசேரி கனகராஜூம் பரிசு வழங்கினர். முதல்கொடி வாங்கிய வண்டிக்கு சிறப்பு பரிசை சீனிப்பாண்டியன் வழங்கினார். சின்னமாட்டு வண்டி போட்டியில் 15வண்டிகள் பங்கேற்றன. போட்டியின் முடிவில் முதல் இடம் பெற்ற முத்துசெல்விக்கு முன்னாள் தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசன திட்டக்குழு தலைவர் உதயசூரியன் பரிசு வழங்கினார். 2ம் இடம் பெற்ற மருகால்குறிச்சி சுப்பம்மாளுக்கு மருதூர் கீழக்கால் பாசன சங்கத்தலைவர் மணக்கரை சீனிப்பாண்டியன் பரிசு வழங்கினார். 3ம் இடம் பெற்ற பத்மநாபமங்களம் முண்டசாமிக்கு நாலாத்தூர் உதயபாண்டியன் பரிசு வழங்கினார். சின்னமாட்டு வண்டியில் முதல் கொடி வாங்கியவருக்கு மணக்கரை அதிமுக கிளை செயலாளர் பொன்பாண்டியன் ரூ.700 பரிசாக வழங்கினார். மாட்டுவண்டிகளைத்தொடர்ந்து குதிரை வண்டி போட்டி நடந்தது. இதில், 11வண்டிகள் பங்கேற்றன. மாடு, குதிரை வண்டிப்போட்டியில் சீறிப்பாய்ந்த காளை, குதிரைகளை கிராமமக்கள், மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்துசென்றனர்.  பாதுகாப்பு ஏற்பாடுகளை ரூரல் டி.எஸ்.பி.,லிங்கதிருமாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முறப்பநாடு விஜயகுமார், புதுக்கோட்டை சாந்தகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், அஜ்மல்ஜெனிட், சோனி மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து