முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட டாக்டர்கள் நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

ஜெய்பூர்,டிச.27 - ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்டிரைக் செய்து வரும் டாக்டர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கையை எடுக்கத்தொடங்கியுள்ளது. ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 10 டாக்டர்கள் மற்றும் 2 மருத்துவ அதிகாரிகளை மாநில அரசு நீக்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சம்பளம் உயர்வு, குறிப்பிட்ட கால வரம்பிற்குள் பதவி உயர்வு, அத்தியவசிய சேவை சட்டத்தில் இருந்து மருத்துவதுறைக்கு விதிவிலக்கு அளித்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் நேற்று 5-வது நாளாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 10 டாக்டர்கள் மற்றும் 2 மருத்துவ உயரதிகாரிகள் ஆகியோர்களை பதவியில் இருந்து நீக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டாக்டர்கள் ஸ்டிரைக்கால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஆய்வு செய்த பின்னர் முதல்வர் அசோக் ஹெலட் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். டாக்டர்கள் ஸ்டிரைக் துரதிர்திருஷ்டவசமானது. சமூக நலன் கருத்தி டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்வர் ஹெலட் கேட்டுக்கொண்டுள்ளார். டாக்டர்கள் ஸ்டிரைக்கால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

இதற்கிடையில் நேற்று 5-வது நாளாக டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதில் அனைத்து மருத்துவமனைகளிலும் பணிபுரிந்து வரும் டாக்டர்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் நிலைமை மோசமாக போகவே 12 டாக்டர்களை நீக்கி மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago