முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் திருவொற்றியூர் தொகுதியில் கோடைக்கால தண்ணீர்பந்தல் திறப்புவிழா

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      சென்னை
Image Unavailable

கோடைக்காலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்க அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் உத்தரவின் பேரில் வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் ஆர்.கே.நகர் பகுதியில் நேற்று 7 இடங்களில் கோடைக்கால குடிநீர் பந்தல் திறக்கப்பட்டது.

குடிநீர் பந்தல்

மாவட்ட கழக பிரதிநிதி ஜெ.எம்.நரசிம்மன் ஏற்பாட்டில் ஆர்.கே.நகர் பகுதியல் அடங்கிய ஏ..கோயில்தெரு புதுவண்ணை மார்கெட் காசிமேடு மீன்பிடி துறைமுகம், பூண்டிதங்கம்மாள்தெரு, முருகன்கோயில், சத்தியமூர்த்திதெரு, பீச்ரோடு மார்க்கெட்தெரு, நம்மையாமேஸ்திரி ஆகிய பகுதிகளில் குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு நீர்மோர், பழவகைகள், வெள்ளரி, இளநீர் மற்றம் பழச்சாறுகளை மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினார்.

 இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் ஆர்.எஸ்.ஜனார்த்தனம், .கணேசன், டேவிட்ஞானசேகரன், எஸ்.எம்.முருகன், டி.கே.சுபாஷ், ஆட்டோதேவராஜ், கே.மகேந்திரன், சிவக்குமார், சுஜாதாமதனகோபால், டைகர்தயாநிதி, சசிகுமார், குமரேசன், கே.பி.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கே.பி.விஜி நன்றி கூறினார். திருவொற்றியூர் பகுதியில் 14வது வட்டம் சுங்கச்சாவடி பேருந்துநிலையத்தில் வட்ட கழக பொருளாளர் என்.தீனன் தலைமையில் அம்மா பூங்கா அமைப்பாளர் டி.கார்த்திக், எஸ்.டேவிட், பந்தல்பாண்டி ஆகியோர் முன்னிலையில் அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி மா.ராசு, குடிநீர் பந்தலை திறந்து வைத்து அங்குள்ள பொதுமக்களுக்கு நீர்மோர், பழவகைகள், வெள்ளரி, இளநீர் மற்றம் பழச்சாறுகளை வழங்கினார். முன்னதாக மாவட்ட கழக முன்னாள் பொருளாளர் ஆர்.பத்மநாபன் நூறு பேருக்கு பிளாஸ்டிக்குடங்களை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வி.டி.எஸ்.இன்பநாதன், டி.மணிமாறன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் டி.செபஸ்டீன், எம்.திருஞானம், ஆர்.தேசிங்கு, டி.கதிரவன், ஆட்டோ சீனிவாசன், பீர்கான்பாய், காந்தி, டி.அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து