எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஜன.- 8 - மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிகட்டு விழாவில் கலந்து கொள்ளும் மாடு பிடி வீரர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சகாயம் கூறுகையில்; தமிழக அரசின் உத்தரவின்படியும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிகட்டு வரும் 15,16 மற்றும் 17 தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டை போல் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த வீர விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. சிறுவிதிமீறல் கூட இல்லாமல், காளைகளுக்கு எந்தவொரு தொந்தரவும் இல்லாமல், கவனமாக செயல்படவேண்டும். தமிழநாட்டு மக்களின் மரபு மற்றும் கலாச்சார விழாவான இந்த ஜல்லிகட்டு விழாவை தொடர்ந்து நடத்த தமிழக அரசு முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாடுபிடி வீரர்கள் பிராணிகளை சிறு அளவிலும் வதை செய்யாமல், காளைகளின் கண்களில் மிளகாய்பொடி தூவுவதோ, எந்தவொரு உபகரணத்தை கொண்டுதாக்கவும், காயப்படுத்தவோ கூடாது. கும்பலாக வந்து களைகளை பிடிக்க கூடாது. குறிப்பாக இளைஞர்கள் மது அருந்தி எந்த சூழ்நிலையிலும் இந்த விழாவில் ஈடுபடக்கூடாது. மேலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு காளைகளுக்கு சிறு தொந்தரவும் இல்லாமல் சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பு தரவேண்டும். வீரர்கள் அனைவரும் மருத்துவப்பரிசோதனைக்கு உட்பட்டிருக்கவேண்டும். விழாவில் கலந்துகொள்ளும் காளைகளை கடைசி நேரத்தில் பதிவு செய்வதை விட நேற்றே பதிவு செய்து இருந்தால் வசதியாக இருக்கும். கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாடுகளை பதிவு செய்வதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேப்போன்று மாடுபிடி வீரர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சகாயம் கூறினார்.
இக்கூட்டத்தில் இணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை ராமகிருஷ்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அலிஅக்பர்,மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ( வேளாண்மை) ஜெய்சிங்ஞானதுரை, வருவாய் கோட்டாட்சியர்கள் (மதுரை) துரைராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1,843 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Mar 2026சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம்,
-
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி: பார்லி., மக்களவை ஒத்திவைப்பு
13 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநில தோ்தல் தேதி மாா்ச் 16-ல் அறிவிப்பு?
13 Mar 2026புதுடெல்லி, தமிழகம், கேரளம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு மாா்ச் 15 அல்லது 16-ஆம் தேதி தோ்தல் தேதியை இந்திய தோ்த
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


