முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளத்திற்காக பாட்டுப்பாடி நிதி திரட்டிய சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள்

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,கேரளா வெள்ளத்துக்கு நிவாரணம் திரட்டும் பொருட்டு டெல்லியில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியில் கேரளத்தைச் சேர்ந்த குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் ஆகிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பாட்டு பாடி நிதி திரட்டினர்.

இந்நிகழ்ச்சி சுப்ரீம் கோர்ட் வளாகத்துக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பிற நீதிபதிகள் மற்றும் டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் கலந்துகொண்டனர்.

நீதிபதி கே.எம்.ஜோசப், பிரபல மலையாள திரைப்படமான அமரம் படத்தில் இருந்து மீனவரின் வாழ்க்கையைச் சொல்லும் பாடலைப் பாடினார். அப்போது பேசிய அவர், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களின் போது முதலில் பாதிக்கப்படுவது அவர்கள்தான். இந்தப் பாடலை அவர்களுக்காக அர்ப்பணிக்கிறேன் என்று தெரிவித்தார்.

நீதிபதி குரியன் ஜோசப், பிரபல பின்னணிப் பாடகர் மோஹித் சவுகானுடன் இணைந்து பாடினார். நீதிபதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியின் மூலம் ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை திரட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தலா ரூ.25,000 பணத்தை கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர். சுப்ரீம் கோர்ட் அலுவலர்கள் கேரள மக்களுக்கு தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து