முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வெயிலை சேமிக்கும் கருவி

குளிர்காலத்திற்குத் தேவையான வெயிலை (சூட்டை) கோடையிலேயே பிடித்து இனி நாம் சேமித்து வைக்க முடியும். உண்மைதான். சுவிச்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தொழில்நுட்ப சாதனத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எளிமையாகவும், எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் இந்த சாதனம் உள்ளது. இதற்குள் இருக்கும் சோடியம் ஹைட்ராக்சைடு ஊடகம், வெப்பத்தை சேமிக்கும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவியை வெயில்படும் இடங்களில் வைத்துவிட்டால் தேவையான அளவு வெப்பத்தை சேமித்து வைக்கும். குளிர்காலத்தின்போது ஒரு பொத்தானை அழுத்தினால் அதில் உள்ள வெப்பம் விடுவிக்கப்பட்டு சுற்றிலும் பரவும்.

கேரளாவுக்கு பெருமை

கூகுள் நிறுவனம், தனது ஆண்ட்ராய்டு இயங்கு தள ங்களுக்கு பிரபலமான உணவு வகை களின் பெயரைச் சூட்டுவது வாடிக்கை. மார்ஷ் மெல்லோவுக்குப் பின்னர் அடுத்த வெர்ஷனுக்கு கேரளாவின் பாரம்பரிய உணவு வகையான நெய்யப்பத்தின் பெயரைச் சூட்டணும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாம்.

ஒரு சமயத்தில் ஒரு நாசி துவாரத்தின் வாயிலாக மட்டுமே சுவாசிக்க முடியும்

இன்றைய நவீன யுகத்தில் மன அழுத்தம் குறைய சுவாச பயிற்சி, பிராணயாமம் என பல்வேறு மூச்சு பயிற்சிகளும், யோக பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. நாம் நாசித் துவாரத்தின் வாயிலாக மூச்சை இழுத்து அதை நுரையீரலுக்கு அளிப்பதன் மூலம் பிராண வாயு உடலுக்கு சென்று தேவையான ஆற்றலை அளிக்கிறது. ஆனால் நாம் சுவாசிக்கும் போது ஒரு நேரத்தில் ஒரு நாசித் துவாரத்தின் வாயிலாக மட்டும்தான் சுவாசிக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா... ஒரே நேரத்தில் இரு நாசித் துவாரங்கள் வாயிலாகவும் மனிதன் சுவாசிப்பது கிடையாது. கேட்பதற்கு மிகவும் இது சிக்கலானது. ஒரு துவாரத்தின் வழியாக சுவாசித்தாலும் இரு நாசிகளும் சம அளவில் பிராண வாயுவை பகிர்ந்து கொள்கின்றன. ஒவ்வொரு நாசித் துவாரத்தின் வாயிலாகவும் சுவாசிப்பது சில மணி நேரங்களுக்கு ஒரு முறை மாறி மாறி நடக்கும் என்பதும் ஆச்சரியமான ஒன்று தானே.

ஏலம் போனது

2-ம் உலகப்போரின் போது எத்தனையோ உயிர்களை கொல்ல ஆணையிட்ட சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி 1945-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஒரு பாதுகாப்பு கிடங்கு அறையில் கண்டு பிடிக்கப்பட்டது. இது தற்போது ரூ.1 கோடியே 68 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

மிகவும் சிறந்தது

குழந்தைகளுக்கு உணர்வுப் பிரச்சனைகளை கையாள அவர்களுக்கு விளையாட்டுச் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. இந்த சிகிச்சை மறைமுகமாக குழந்தைகளின் தேவைகளை புரிந்துகொள்வது. இதன் மூலம் குழந்தையின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரமுடியும். 3 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையை பயன்படுத்தலாம்

பார்வை பத்திரம்

நாம் ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடும்போது நமது கண்களில் உள்ள நீர் வேகமாக ஆவியாகி கண்கள் உலர்கிறது. இதனால், கண்களில் தண்ணீர் உற்பத்தி தடைபட்டு உலர் கண் நோய்கள், கண் வீக்கம் மற்றும் கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. இது தொடர்ந்தால் கண் பார்வை முற்றிலும் பறிபோகுமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago