முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

7 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

வரலாற்றில் முதன் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் என்றே தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது.  இவற்றில் நீர் மற்றும் வாழக்கூடிய தன்மைகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என மூத்த ஆராய்ச்சியாளர் மைக்கேல் கில்லான் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே வாணியல் ஆரய்ச்சியாளர்கள் ஏழு கோள்களை கண்டுபிடித்துள்ளனர். எனினும் அவை அனைத்தும் பூமி அளவில் இருக்கவில்லை இதனால் பூமி அளவு கொண்ட 7 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. அனைத்து கோள்களும் ஒரே சுற்றுப் பாதையில் பயணிப்பதால் இவற்றின் ஒரு பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என கூறப்படுகிறது.

குரங்குக்கு டயட்

பாங்காக்கில் உள்ள புளோட்டிங் மார்க்கெட் என மிதக்கும் சந்தை அருகே குண்டு குரங்கு ஒன்றை கண்ட வனவிலங்கு அதிகாரிகள் அதன் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். குண்டு அங்கிள் என்ற பெயர் வைத்து,  15 கிலோவாக இருக்கும் அதன் எடையை குறைக்க டயட்டை பின்பற்றச் சொல்லி, தினமும் ஓட வைத்து பயிற்சி கொடுக்கிறார்களாம்.

புதிய மென்பொருள்

தேவையற்ற வீடியோவைத் தடுக்க புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரே மேட்டிக்ஸ் என்ற நிறுவனம் பேஸ்புக்கில் பதிவிடப்படும் மனதை பாதிக்கும் வகையில் உள்ள வீடியோக்களை தடுக்க செயற்கை நுண்ணறிவின் மூலம் பணியாற்றும் மென்பொருளை கண்டுபிடித்துள்ளது. இது தேவையற்ற வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிடமுடியாத வகையில் 95 சதவீதம் கட்டுப்படுத்துகிறது.

மழை வாசனையை நாம் விரும்ப காரணம் என்ன?

பொதுவாக தண்ணீருக்கு எந்த சுவையும் மணமும் கிடையாது. ஆனால் மழை பெய்யும் போது மட்டும் ஏன் ஓர் அற்புதமான வாசனை ஏற்படுகிறது. அந்த மழை வாசனை நம்மை ஈர்ப்பது ஏன். ஏனெனில் மழை பெய்யும் போது மண்ணில் உண்டாகும் ஈரத்தால் ஜியோஸ்மின் என்கிற ஒரு வகை பாக்டீரியா உருவாகிறது. அதுதான் மழைக்கு வாசனையை கொடுக்கிறது. இந்த மழை வாசனைக்கு பெட்ரிசோர் என்ற பெயரும் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆன்மீக ஸ்தலம்

தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் இந்த வேளாங்கன்னியில் அன்னை மரியாவிற்கு ஒரு மகத்தான பேராலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், சென்னை முதலிய பல இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

ஆதாரை ஈஸியாக லாக் செய்ய..

உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவுக்கு மோசடி செய்பவர்களால் அணுகப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  ஆதார் அட்டையை வைத்திருப்பவர்களுக்கு  தனது ஆதார் எண்ணை லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதியை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. Lock/Unlock செய்வது எப்படி? https://uidai.gov.in/ என்ற இணையத்திற்குள் செல்லவும்.‘Aadhaar service’ என்ற பிரிவின் கீழ் ‘Lock & Unlock’ என்பதை கிளிக் செய்யவும். UID பட்டனை செலக்ட் செய்து அதில் உங்களது UID நம்பர், பெயர், PIN code உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யவும். Send OTP’ என்பதை கிளிக் செய்து Submit கொடுக்க வேண்டும். இப்போது உங்களது ஆதார் எண் லாக் செய்யப்பட்டுவிடும். மீண்டும் உங்களது ஆதார் எண்ணை அன்லாக் செய்வதற்கு ஆதார் வலைப்பக்கத்தில் Unlock பட்டனை கிளிக் செய்து விர்ச்சுவல் ஐடியைப் பதிவிட்டு send OTP மற்றும் submit கொடுத்தால் அன்லாக் ஆகிவிடும். அவ்வளவுதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago