முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நாசா முயற்சி

வரும் செப்டம்பர் மாதம் பென்னு குறுங்கோளை ஆய்வு செய்யும் பணிக்காக ஆசிரிஸ் ரெக்ஸ் செயற்கைக்கோள் அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் சூரியக் குடும்பத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ளவும், குறுங்கோள்களால் பூமிக்கு ஆபத்து உண்டா என்பது குறித்தும் ஆய்வு செய்ய இயலுமாம்.

முத்திரையிட பயன்படும் அரக்கு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?

முந்தைய காலங்களில் மூடி சீலிடுவதற்கும் அவற்றில் அரசாங்க முத்திரை இடுவதற்கும் அரக்கு என்ற  பொருளை பயன்படுத்துவது வழக்கம். இன்றைக்கும் ஜப்தி செய்யப்பட்ட இடங்களை நீதிமன்ற ஊழியர்கள் பூட்டி விட்டு அதன் மீது துணியை சுற்று அரக்கால் சீல் வைப்பதை நாம் பார்த்திருக்கலாம். மேலும் இந்த அரக்கு உணவு பண்டங்கள், மரச் சாமான்கள் போன்றவற்றுக்கு நிறமேற்றம் செய்யவதற்கும், பர்னிச்சர் பொருள்களை செம்மைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அதெல்லாம் சரி.. இது எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என தெரியுமா... இந்தியா மற்றும் தாய்லாந்தில் உள்ள காடுகளில் மரங்களில் வசிக்கும் ஒரு வகை பூச்சியினத்தில் இருந்துதான் இந்த அரக்கு பெறப்படுகிறது. இதன் பெண் பூச்சிகள் உருவாக்கும் திரவம்தான் பசை போல இறுகி பின்பு அரக்காக மாறுகிறது என்றால் ஆச்சரியம் தானே.

எடையை குறைக்க

உடல் எடையை குறைக்க சைக்கிளிங் சிறந்த பயிற்சி. தினமும் காலை, மாலை என இரு வேளைகள் சைக்கிளிங்கில் செல்லலாம். மேலும், வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு சைக்கிள்களில் செல்லுதல், வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் நீண்டதூரம் சைக்கிள் பயணம் போன்றவை மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். மேலும் உடல் பருமனையும் குறைக்கலாம்.

நீச்சல் குளம்

இத்தாலியில் 42 மீட்டர்‌ ஆழம் கொண்ட நீச்சல் குளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. வெந்நீர் ஊற்றுக்கு பெயர் போன இத்தாலியின் கொல்லி இகானி பகுதியில் இந்த நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. 10 மீட்டர் மற்றும் 20 மீட்டர் ஆழத்தில் குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீச்சல் குளத்தின் சிறப்பம்சத்தை கேள்விப்பட்ட பல நீச்சல் வீரர்கள் இங்கு நீத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சாதனை வைரம்

ஹாங்காங்கில் சொதேபி என்ற ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில் 59.6 கேரட் அளவிலான அரிய வகை இளம்சிவப்பு நிற வைரம் ஏலம் விடப்பட்டது. இதை நகை வியாபாரி ஒருவர் சுமார் 463 கோடிக்கு ஏலம் எடுத்தார்.  இதன்மூலம் இதுவரை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வைரம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.

தீயணைப்பு படை வீரராக பணியாற்றியஹாலிவுட் நடிகர் யார் என்று தெரியுமா?

டெஸ்பரேடோ போன்ற புகழ் பெற்ற படங்களில் நடித்தவர் ஹாலிவுட் நடிகரான ஸ்டீவ் பஸ்செமி. இவர் 1980 முதல் 1984 வரையிலும் நியூயூார்க் நகரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையில் பணியாற்றினார். பின்னர் நடிகராகி பெரும் பணமும் புகழும் ஈட்டினார். இந்த சூழலில் நியூயார்க் நகரில் செப்டம்பர் 2011 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு, இவர் தானாகவே விரும்பி சென்று தீயணைப்பு சேவைகளில் ஈடுபட்டார். இதற்காக சக வீரர்களுடன் இணைந்து சுமார் 12 மணி நேரம் வரையிலும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். செப்டம்பர் தாக்குதலில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார் என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago