முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மிதக்கும் சொர்க்கம்

பிரான்ஸ், செயின்ட் நகரில் ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் நிறுவனம் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலை வடிவமைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக கருதப்படும் இந்த ஹார்மோனி ஆஃப் தி சீஸ் 1.1 பில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்பட்டிருக்கிறது. 1.20 லட்சம் டன் எடையும், 210 அடி உயரமும், 362 மீட்டர் நீளமும் கொண்டது. 16 தளங்களை கொண்ட இந்த பிரம்மாண்ட சொகுசு கப்பலில் 6,360 பயணிகளும், 2,100 கப்பல் பணியாளர்களும் பயணிக்கலாம். வரும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் சவுதம்டன் நகரிலிருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவுக்கு முதல் பயணத்தை துவங்க இருக்கிறது இந்த ஹார்மோனி ஆஃப் தி சீஸ் சொகுசு கப்பல்.

பிராணாயாமம்

நாம் மிக ஆழமாக மூச்சை இழுக்கும்போது ஆக்சிஜன், உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் அதிக அளவில் கிடைக்கிறது. இது திசுக்களின் செயல்பாட்டை விரைவுபடுத்தி நச்சுக்களை அப்புறப்படுத்துகிறது. வயிறு உள்ளே போவதால், வயிற்றுப் பகுதி தசைகள் சுருங்கும். இந்தத் தசைப் பயிற்சியை, தினமும் தொடர்ந்து செய்யும்போது, இவை இரண்டும் சேர்ந்து உடலின் எடையைக் குறைத்துவிடும்,

அரிதான நோய்

சீனாவை சேர்ந்த ஹூவாங் சுன்சய் என்பவர் நியூரோஃபிப்ரோடோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தில் 15 கிலோ கட்டியுடன் இதுவரை 4 முறை அறுவை சிகிச்சைச் செய்தும் பலன் தரவில்லை. இவரை, சீனாவில் ’யானை நாயகன்’ என்று கூறுகின்றனர்.

உருகாத ஐஸ்கிரீம்

ஐஸ்க்ரீம் உருகுவதைத் தடுக்க ஜப்பான் விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். ஜப்பானில் உள்ள கனஜவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஐஸ்க்ரீம் உருகி அதன் வடிவம் மாறாமல் இருக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் 3 மணி நேரத்துக்கு அந்த ஐஸ்க்ரீம் உருகாமல் இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ட்ராபெரி பழத்திலிருந்து எடுக்கப்படும் பாலிஃபினல் என்ற திரவத்தை ஐஸ்க்ரீமில் செலுத்தி சோதனையில் வெற்றி அடைந்துள்ளனர். இந்த திரவத்தை செலுத்தியபின் ஐஸ்கீரிமை அனல் காற்றில் காண்பித்தாலும் சுமார் 5 நிமிடம் வரை ஐஸ்க்ரீமின் வடிவம் மாறவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிக் பெண்ட்

துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா உலகின் உயர்ந்த கட்டிடமாக இருக்கிறது. தற்போது, சுமார் 1,220 மீட்டர் உயரத்திலான கட்டிடம் ஒன்றை நியூயார்க்கில் வடிவமைக்க உள்ளனர். இதன் உயரத்தை விட மிக பெரிய சாதனை என்னவென்றால், இது தலைகீழான U வடிவில் அமைக்கப்படவுள்ளது. இக்கட்டிடத்துக்கு பிக் பெண்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மிளகு ஓரிஜினலா, கலப்படமா...

நாம் வாங்கும் பொருள் ஓரிஜினலா கலப்படமா என்ற குழப்பம் எப்போதும் இருக்கும். அதிலும் குறிப்பாக அதிக விலை கொடுத்து வாங்கும் மிளகில் கலப்படத்தை எப்படி கண்டு பிடிப்பது..  இதற்காக  சோதனைச்சாலைக்கெல்லாம் செல்ல வேண்டியதில்லை.. அதை நீங்கள் வீட்டிலேயே வைத்து கண்டுபிடித்து விடலாம்.. எப்படி என்று பார்க்கலாமா... சிறிய அளவு கருப்பு மிளகு எடுத்து மேஜை மீது வைத்து கட்டை விரலால் இந்த மிளகை அழுத்தவும். அல்லது நசுக்கவும். மிளகு அவ்வளவு எளிதில் உடையாது. ஆனால் அதில் கலப்பட மிளகு இருந்தால் நீங்கள் அதை நசுக்க முடியும். நசுக்கப்பட்ட மிளகு ஒளி வெளிர் கருப்பட்டிகளாக மாறும். மிளகை சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போடவும். மிளகு தரமானதாக இருந்தால் தண்ணீரின் அடியில் மூழ்கி விடும். மிளகு போலியானதாக இருந்தால், பப்பாளி விதையாக இருந்தால் அது நீரில் மிதக்க செய்யும். மிளகை கடித்தால் காரத்தன்மையுடன் இருக்கும். பப்பாளி விதையாக இருந்தால் அது வாசனை தன்மையற்று, சுவையற்று சுருங்கி இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago