முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நாள்தோறும் 200 உயிரினங்கள் அழிகின்றன

சூழல் மாசு உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 150-200 வகையான தாவரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சூழல் சமநிலை இழப்பால் டைனோசர்கள் அழிந்ததிலிருந்து தற்போது உலகம் எதிர் கொண்டு வரும் சூழல் அச்சுறுத்தல் முன்பை விட அதிகமாகும் என எச்சரிக்கின்றனர்.

வைட்டமின் டி

நமது உடலில் வைட்டமின் டி குறைந்தால் மனஅழுத்தம், உடல் பருமன் முதுகுவலி , மூச்சிரைப்பு , உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே வைட்டமின் டி உள்ள உணவு பொருட்களான மீன் வகைகள், இறைச்சி, பால் மற்றும் பால் பொருட்கள் தானிய வகைகள் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு போன்றவை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

ஏரோமொபில்

விரைவில் அறிமுகமாகவுள்ள ஏரோமொபில் எனும் புதிய பறக்கும் கார், வானிலும் சாலையிலும் பயணிக்கும் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. 5 அடி நீளம் கொண்ட இந்தப் பறக்கும் காரில், இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கலாம். சாலையில் செல்லும்போது 310 மைல்கள் வரை பயணிக்குமாம்.

முதல் காற்றாடி

2000 ஆண்டுகளுக்கு முன் சீனாவை ஆண்டு வந்த ஹூவான் ஹெங் என்ற அரசன் உலகின் முதல் காற்றாடியை பறக்கவிட்டார். பின்னர் மூங்கில், மெல்லிய பட்டுத்துணி, நூலுடன் நல்ல பட்டங்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் ஒன்பதாவது மாதத்தில் ஒன்பதாவது நாளை பட்டங்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

நுண்ணோக்கியை கண்டு பிடித்தவர் யார் தெரியுமா

ஆண்டனி வான் லியூவென்ஹாக் (Antonie van Leeuwenhock) என்ற டச்சுக்காரர் 1670ஆம் ஆண்டு வாக்கில் சிறு கண்ணாடி வில்லையைப் பயன்படுத்தி முதலாவது நுண்ணோக்கியைக் கண்டுபிடித்தார். பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்ட முதலாவது நுண்ணோக்கியைக் கண்டவர் இவரே. மிக நுட்பமான பொருட்களையும் பல்லாயிரம் மடங்கு பெரிதாகக் காட்டும் திறன் வாய்ந்த நுண்ணோக்கிகளும் இப்போது உள்ளன. தாவரத்தின் உயிரணுக்கள் (plant cell) போன்றவற்றை நுண்ணோக்கியின் துணையின்றிக் காண இயலாது என்பதை நாம் அறிவோம்.

பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்

பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. இத்தாலியில் நடைப்பெற்ற கண்காட்சி ஒன்றில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது. இதில் செராமிக் எல்.இ.டி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சமும், தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. டிஸ்பிளேவில் வேகம், போகும் பாதை, ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும் வகையில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago