முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் பற்றிய மிரள வைக்கும் உண்மைகள்!

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      பிரத்யேகமான      உலகம்
THUMB-1

ஆண்டுதோறும் இயற்கைப் பேரிடர்களால் உலகிலேயே அதிகமாக பாதிக்கப்படும் நாடாக ஜப்பான் உள்ளது. எவ்வளவு பெரிய பேரிழப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து மீளும் ஜப்பானியர்களின் கடின உழைப்பு,விடா முயற்சி மற்றும் நம்பிக்கை முதலிய ஆயுதங்கள் உலகிற்கே ஒரு  மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஒரு வருடத்திற்கு  1500 நில நடுக்கும் ஏற்படுகிறது .இந்த நில நடுக்கம் ஜப்பானில்  எதாவது ஒரு இடத்தில் வந்து கொண்டே இருக்கும் .அதுமட்டுமின்றி அதிக அளவு எரிமலைகள் உள்ளன .அதாவது 145 எரிமலைகள் உள்ளன. அதில் சில  எரிமலைகள்  திடீரென வெடிக்கும் நிலையில் உள்ளன.இவ்வாறு இருப்பினும் அந்த இடத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் . இவ்வளவு ஆபத்து இருந்தும் எரிமலை பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்கள்.

ஜப்பானை பற்றியும் ஜப்பானியர்களைப் பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டிய வியப்பூட்டும் சில மிகவும் சுவாரஸ்யமான உண்மைத் தகவல்களை இதோ இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்...!

நம் பூமியில்  பல நாடுகள் இருப்பினும் ஜப்பான் ஒரு சிறந்த நாடாகவே விளங்குகிறது.இந்த ஜப்பான் ஆசிய கண்டத்தில் பல தீவுகளால் ஆனது.ஜப்பான் பசிபிக் பெருங்கடலின் மேற்குபகுதியில் உள்ளது.இந்த ஜப்பான் 6852 தீவுகளை உள்ளடக்கியது.இதன் மக்கட் தொகை 12.6 கோடி ஆகும். ஜப்பான் பொருளாதாரத்தில் 4 ம் இடத்தை பிடித்துள்ளது.வளர்ந்த நாடுகளில் ஒன்று இந்த ஜப்பான் நாடு . இவ்வாறு ஒரு சிறந்த நாடாக பேசப்படுகிறது. இதன் தலைநகரம் டோக்கியா  ஆகும்.ஜப்பான் சிறிய நாடாக இருப்பினும்  அதன் மக்கள் தொகை அதிகம்.உலகின் மக்கள்  தொகை அளவில் 10 ஆவது இடத்தில்  உள்ளது ..ஜப்பான் ஒரு தீவு கூட்டம் என்றே அழைக்கப்படுகிறது.ஜப்பான் என்ற பெயருக்குச்  சூரியன்  எழும் நாடு என்று பொருள்.

6,800 கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய நாடு ஜப்பான் ஆகும். ஜப்பானின் மொத்த மக்கள் தொகை 127 மில்லியன் ஆகும்.  உலகிலேயே அதிக வயதுகள் வாழும் மனிதர்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது. சராசரியாக ஜப்பானிய ஆண்கள் 81 வயது வரையிலும், ஜப்பானிய பெண்கள் 88 வயது வரையிலும் வாழ்கிறார்கள். ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஜப்பானில் உருவாகின்றன. இருப்பினும் இவைகளில் சில நிலநடுக்கங்கள்  மட்டுமே வீரியம் கொண்ட அச்சுறுத்தும் நிலநடுக்கங்கள் ஆகும்.

ஜப்பானியர்கள் தங்கள் குழந்தைகளை விட செல்லப்பிராணிகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்கிறார்கள் என்ற சுவாரஸ்யமான உண்மை  தெரிந்து கொள்ளுங்கள். ஜப்பான் நாட்டின் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தங்களது சுற்றுவட்டாரத்தை தாங்களே தூய்மைப்படுத்துவது என்பது கல்வித் திட்டத்தின் ஒரு அங்கமாக உள்ளது. பள்ளிகளில் உள்ள கழிவறைகள், வகுப்பறைகள் மற்றும் பள்ளியை  சுற்றி உள்ள எல்லா பகுதிகளை மாணவர்களே தூய்மை செய்கிறார்கள்.  இந்திய கலாச்சாரத்தை பொருத்த வரையில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது இரு கைகளை சேர்த்து வணக்கம் தெரிவிப்பது  வழக்கம்,மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது இருவரும் தங்கள் கைகளை சேர்த்து குலுக்குவார்கள், இதேபோல  ஜப்பானிய கலாச்சாரத்தில் ஜப்பானியர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது தங்களின் தலையை இருவரும் தாழ்த்தி வணக்கத்தை  செலுத்துகிறார்கள்.

ஜப்பானிய இளைஞர்களில் கிட்டத்தட்ட அனைவருமே கல்வியறிவு பெற்றவர்கள் ஆவார்கள். நம்ம ஊரில் கருப்பு நிற பூனைகளை பார்ப்பது அபசகுனமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது, ஆனால் ஜப்பான் நாட்டில் கருப்பு நிற பூனைகள் அதிர்ஷ்டத்தின் ஒரு அடையாளமாகவே உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய நகரமான டோக்கியோ நகரம் ஜப்பானில் தான் உள்ளது.

ஜப்பான் நாட்டில் தற்கொலைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது என்பது ஜப்பானைப் பற்றிய ஒரு சோகத்திற்குரிய உண்மையாகும்.

ஜப்பானுக்கு அடுத்தபடியாக ஜப்பானியர்கள் அதிகம் வாழும் நாடாக பிரேசில் நாடு உள்ளது. பெரும்பாலான ஜப்பானியர்கள் ஷின்டோ என்ற  மதத்தை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்.

ஜப்பானில் டால்பின்கள் மற்றும் குதிரை மாமிசங்கள் உணவாக சாப்பிடப்படுவது மிகவும் சாதாரணமான ஒரு விஷயமாக உள்ளது. ஜப்பான் நாட்டு  மக்கள் '4' எண்ணை அதிர்ஷ்டமற்ற ஒரு எண்ணாக கருதுகிறார்கள். 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் பயன்படுத்தும் செல்போன்கள்

நீர் புகாத செல்போன்களாக உள்ளன. இதற்கு காரணம் குளிக்கும்போது கூட செல்போன்களை பயன்படுத்துபவர்களாக பெரும்பாலான ஜப்பானியர்கள் இருக்கிறார்கள்.

உலகில் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை கவரும் அனிமேஷன் கார்டூன் தொடர்கள்  ஜப்பானில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

ஜப்பானில் பொது இடங்களில், சாலைகளில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்ட ஒரு செயலாகும். புகை பிடிப்பதற்கு என்றே ஜப்பானின் பல பகுதிகளில் தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மட்டுமே புகை பிடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உணவு பொருட்கள் முதல் பாலியல் சம்பந்தப்பட்ட பொருட்கள் வரை பெரும்பாலான ஜப்பானியர்கள் வென்டிங் மெஷின்கள் என்ற இயந்திரங்களின் மூலமாகவே வாங்குகிறார்கள். நம்ம ஊரில் பெட்டிக்கடைகள் நிரம்பியுள்ளது போல ஜப்பானில் மில்லியன் கணக்கான  வெண்டிங் மெஷின்கள் நிரம்பியுள்ளன.

ஜப்பானில்  தர்பூசணிகள் கட்டமாக வளர்கின்றன மற்ற இடங்களில் வளரும் தர்பூசணிகள் வட்டமாக இருக்கும்.ஆனால் ஜப்பானில் விளையும்  தர்பூசணிகள் கட்டமாக வளர்கின்றன..இவை ஏன் கட்டமாக வளர்கிறது என்று கேட்டால் அவைகள் கட்டமான ஒரு மரப்பெட்டியில் ஆரம்பத்திலே வைத்து வளர்ப்பதால் அந்த தர்பூசணிகள்  கட்டமாக வளர்கின்றன.இதனுடைய ஒரு தர்பூசணியின் விலை 8000 ரூபாய் வரை இருக்கும் . இது  உலகின் விலை உயர்ந்த பழமாகவும் கருதப்படுகிறது.

ஜப்பானின் குற்றச்செயல்கள் அவ்வப்போது நடைபெற்றாலும், உலக அளவில் பார்க்கும்போது குற்றங்களின் விகிதம் ஜப்பானில் மிகவும் குறைவாகவே உள்ளது.

உலகை திருப்பிப்போட்ட இரண்டாம் உலகப்போரின் கொடூட சம்பவமான  1945 ல் நடைபெற்ற ஹிரோஷிமா நாகசாகி  குண்டு வெடிப்பே காரணமாகும் . அமெரிக்கா ஜப்பான் மீது வைத்திருந்த கோபத்தை அணுகுண்டு செலுத்தி தீர்த்துக்கொண்டது. இந்த அமெரிக்காவின் சக்தி வாய்ந்த அணுஆயுத சக்தி மிகவும் சேதத்தை ஜப்பானுக்கு ஏற்படுத்தியது. இந்த சேதத்தினால் ஜப்பானில் ஒரு சிறு செடி கொடி கூட வளராத அளவிற்கு அந்த அணுக்குண்டு பாதிப்பை ஏற்படுத்தியது.இந்த குண்டு வெடிப்பினால் இன்றளவும் மரபணு மாற்றத்தால் குழந்தைகள்  ஊனமுடன் பிறக்கின்றன.இந்த மாபெரும் குண்டுவெடிப்பு அங்குள்ள செடிகள்,மனிதர்கள்,மரங்கள் அனைத்திலும் பாதிப்பை ஏற்பபடுத்தியது.

ஜப்பானில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது.இதனால் ஜப்பான் மக்களின் எண்ணிக்கை வருங்காலத்தில்

மிக மோசமாக மாறிவிடக்கூடும் என்பதனால் ஜப்பானிய அரசு எந்த பெண்மணி குழந்தையை பெற்றுக்கொள்கிறார்களோ அவர்களின்  குழந்தைக்கான முழு செலவையும் ஜப்பானிய அரசு ஏற்றுக்கொள்ளுமாம்.குழந்தை பெற்ற பெண்மணிக்கு 2 லட்சம் வரை பரிசு தருகிறார்கள்.

ஜப்பானிய மக்கள் அதிக அளவு மிதிவண்டியை ஓட்டுகிறார்கள் என்றால் அவர்களின் மக்கள் தொகை அதிக அளவு இருப்பதால் அதிக அளவு  சாலையில்  வாகன நெருக்கடி ஏற்படுகிறது இதன் காரணமாக அவர்கள் அதிக அளவு மிதிவண்டியை பயன்படுத்துகின்றனர்.இந்த மிதிவண்டியை  ஓட்டுவதற்காக அவர்கள் தனித்தனி ஒட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் அதுமட்டுமில்லாமல்  மிதிவண்டிக்கு அடையாள எண்ணை  கொண்டிருக்க வேண்டும்.நம் ஊரில் பயன்படுத்தும் மிதிவண்டி போல கண்ட இடங்களில் மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு கண்ட இடங்களில் நிறுத்துவது போல ஜப்பானில் நிறுத்தக்கூடாது.ஜப்பானில் மிதிவண்டி வாங்கிய உடனே அதனை அரசிடம் பதிவு செய்ய  வேண்டும்.இதுமட்டுமின்றி ஜப்பானில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மிதிவண்டி ஓட்டினால் தலைக்கவசம் அணிந்து செல்ல  வேண்டும்.ஜப்பானில் எல்லா இடத்திலும் மிதிவண்டியை ஓட்டி செல்ல முடியாது. மிதி ஓட்டுவதற்கென்று தனி இடம் ஒதுக்கி வைத்திருப்பர் அதில் மட்டுமே ஓட்ட வேண்டும். கைபேசி கொண்டோ அல்லது குடையை பிடித்துக்கொண்டோ மிதிவண்டியை ஓட்டக்கூடாது.ஒரு  மிதிவண்டியில் இருவர் செல்லக் கூடாது ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும்.

நம் கைகளில் சாப்பிடுவதுபோல் ஜப்பானியர்கள் சாப்ஸ்டிக் என்றழைக்கப்படும் குச்சிகளில் சாப்பிடுகிறார்கள். இந்த குச்சியில் சாப்பிடுவதால்  ஒரு  வருடத்திற்கு 8 மில்லியனுக்கு மேலான  குச்சிகள் தேவைப்படுகிறது.இந்த குச்சிகளை தயாரிப்பதற்காக ஒரு வருடத்திற்கு 3 மில்லியனுக்கும்  மேலான மரங்களை வெட்டுகிறார்களாம்.

ஜப்பானில் உலகிலேயே அதிக வயதானவர்கள் உள்ள நாடாகும். அதாவது உலகிலேயே அதிக வயதானவர்கள் 100 வயதிற்கும் மேலான நபர்கள்  அதிகம் வாழ்கின்றனர். ஜப்பானில் தத்து எடுக்கும் நபர்கள் 20 வயதிலிருந்து 30 வயதினரையே  தத்து  எடுக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து