முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஓட்ஸ் சீஸ் கீரை தோசை

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

ஓட்ஸ் சீஸ் கீரை தோசை செய்யத்தேவையான பொருட்கள்.

 1. அரைக்கீரை - ஒரு கட்டு.
 2. ஓட்ஸ் - 200 கிராம்.
 3. முட்டை - 3.
 4. சீரகத்தூள் - 1/4 ஸ்பூன்.
 5. மிளகு தூள் - ஒரு ஸ்பூன்.
 6. வெஜிடபிள் ஆயில் - 2 ஸ்பூன்.
 7. சீஸ் - சிறிதளவு.
 8. பட்டர் - ஒரு ஸ்பூன்
 9. உப்பு - தேவையான அளவு.

 

Method: 
 1. செய்முறை ;--  
 2. ஒரு மிஸ்சி ஜாரில் சுத்தம் செய்த ஒரு கட்டு அரைக்கீரையை போடவும்,இதனுடன் 200 கிராம் ஓட்ஸ் போட்டு 3 முட்டையை உடைத்து ஊற்றி சிறிதளவு தண்ணீர் சேர்த்து  நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
 3. அரைத்தவற்றை ஒரு பவுலில் போடவும்,இதனுடன் சீரகத்தூள் 1/4 ஸ்பூன்,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,தேவையான அளவு உப்பு மற்றும் 2 ஸ்பூன் வெஜிடபிள் ஆயில் ஊற்றி  தோசை பதத்திற்கு மாவை நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
 4. ஒரு தட்டில் சிறிதளவு சீஸை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
 5. அடுப்பில் கடாயை  வைத்து ஒரு ஸ்பூன் பட்டரை போட்டு பரப்பி விடவும்.
 6. தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிதளவு எடுத்து தோசைக்கு ஊற்றுவது போல் கடாயில் ஊற்றி கடாயை மூடி போட்டு மூடி ஒரு நிமிடம் நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
 7. ஒரு நிமிடம் கழித்து கடாயை திறந்து சிறிதளவு நறுக்கி வைத்துள்ள சீஸை எடுத்து தோசையின் ஒரு புறம் மட்டும் தூவி தோசையை மடித்து சிறிது நேரம் வேக விடவும்.
 8. சுவையான ஓட்ஸ் சீஸ் கீரை தோசை ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago