முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் ரிம் ஜிம் கபாப்

Cooking time in minutes: 
20
Ingredients: 

சிக்கன் ரிம் ஜிம் கபாப் செய்யத் தேவையான பொருள்கள்;

பொடியாக நறுக்கிய போன்லெஸ் சிக்கன் -200 கிராம்.

இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்.

வெண்ணெய் - 1 ஸ்பூன்.

பொடியாக நறுக்கிய பச்சை குடை மிளகாய்- 1/2 ஸ்பூன்.  

பொடியாக நறுக்கிய மஞ்சள் குடை மிளகாய்- 1/2 ஸ்பூன். 

பொடியாக நறுக்கிய சிகப்பு  குடை மிளகாய் - 1/2 ஸ்பூன். 

சாட் மசாலா பொடி - 1/2 ஸ்பூன்.

தனியா பவுடர் - 1/2 ஸ்பூன்.

பொடியாக துருவிய சீஸ்  - 1 ஸ்பூன் .

சீரக தூள் - 1/2 ஸ்பூன்.

கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்.

வெண்ணெய் - 1 ஸ்பூன்.

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு. 

உப்பு  - தேவையான அளவு.

Method: 

 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய போன்லெஸ் சிக்கன் 200 கிராம்,இஞ்சி,பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், சாட் மசாலா பொடி 1/2 ஸ்பூன்,சீரக தூள் 1/2 ஸ்பூன்,தனியா பவுடர் 1/2 ஸ்பூன்,கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன், பொடியாக துருவிய சீஸ் ஒரு ஸ்பூன்,பொடியாக நறுக்கிய பச்சை குடை மிளகாய் 1/2 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய மஞ்சள் குடை மிளகாய் 1/2 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய சிகப்பு குடை மிளகாய் 1/2 ஸ்பூன், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு,நன்கு கலந்து விட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. ஒரு அடி நீளமுள்ள கம்பியை எடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள சிக்கனை அப்பி செருகி விடவும்.
  3. தந்தூரி அடுப்பு அல்லது மைக்ரோ ஒவனில் 10 நிமிடம் வேக விடவும்.
  4. 10 நிமிடம் ஆகிவிட்டது, தந்தூரி அடுப்பில் இருந்து சிக்கனை எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.
  5. சிக்கனை சிறு,சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  6. சிக்கன் மேல் ஒரு ஸ்பூன் வெண்ணெய் ஊற்றவும்,சிறிதளவு சாட் மசாலா தூள் மற்றும் கொத்தமல்லியை தூவி விடவும்.
  7. சுவையான சிக்கன் ரிம் ஜிம் கபாப் ரெடி.     

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!