முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பேபி கார்ன் பன்னீர் கிரேவி

Cooking time in minutes: 
20
Ingredients: 

பேபி கார்ன் பன்னீர் கிரேவி செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பேபி கார்ன் - 15.
  2. பன்னீர் -  200 கிராம்.
  3. தக்காளி - 4.
  4. மஞ்சள்தூள் -  1/2 டீஸ்பூன்.
  5. பொடியா  நறுக்கிய பெரிய வெங்காயம் - 2.
  6. நீளமாக நறுக்கி விதை நீக்கிய பச்சை மிளகாய் - 2.
  7. பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1.
  8. மல்லி,புதினா - சிறிதளவு.
  9. இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
  10. மிளகாய்த்தூள் -  2 டீஸ்பூன்.
  11. மல்லித்தூள் -  2 டீஸ்பூன்.
  12. சில்லிசாஸ் -  1 டீஸ்பூன்.
  13. டொமோட்டோ சாஸ் - 1 டீஸ்பூன்.
  14. பட்டர் - 1 டீஸ்பூன்.
  15. சர்க்கரை - 1 டீஸ்பூன்.
  16. சோயாசாஸ் -  2 டீஸ்பூன்.
  17. எண்ணெய் - சிறிதளவு.
  18. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. ஒரு மிக்சி  ஜாரில் நறுக்கிய 4 தக்காளியை போட்டு நன்றாக  அரைத்து வைத்துக் கொள்ளவும். 
  2. அடுப்பில்  கடாய் வைத்து  சுத்தம் செய்து நறுக்கிய 15 பேபி கானை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு 5 நிமிடம்  கடாயை மூடி வேக வைத்து,பின்னர் சிறிது நேரம் ஆற வைத்து பேபி கானை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்,எண்ணெய் சூடானவுடன் வடிகட்டி வைத்துள்ள பேபி கானை போட்டு நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில்  கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்,எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய ஒரு குடைமிளகாய்,நீளமாக நறுக்கி விதை நீக்கிய 2 பச்சை மிளகாய்,சிறிதளவு மல்லி,புதினா மற்றும்  பொடியா நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை  போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  5. இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது,2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டீஸ்பூன் மல்லித்தூள் மற்றும் மிக்சியில அரைச்ச தக்காளி விழுதை போட்டு வதக்கவும்.
  6. இதனுடன் ஒரு டீஸ்பூன் சில்லிசாஸ், ஒரு டீஸ்பூன் டொமோட்டோ சாஸ்,ஒரு டீஸ்பூன் பட்டர் மற்றும் தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை, 2 டீஸ்பூன் சோயாசாஸ் மற்றும் 200 கிராம் பன்னிரை போட்டு நன்றாக  வதக்கவும்.
  7. சிறிதளவு மல்லியை தூவி விடவும்.
  8. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  9. சுவையான பேபி கார்ன் பன்னீர் கிரேவி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்