முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கம்பின் 12 மருத்துவ குணங்கள்

 1. கம்பு பயிறு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசிஎடுக்காமல் இருக்கும், இதனால் அவர்களின் உடல் எடை குறையும்.
 2. பெண்களுக்கு மாதவிடாயின் போது சில சமயங்களில் அதிக இரத்த போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகிறது. இப்படியான நேரங்களில் வெதுவெதுப்பான கம்பு கூழ் அல்லது கம்பு சூப் பருக இந்த பிரச்சனைகள் தீரும்.
 3. கம்பு பெண்களுக்கு எற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகளை சரிசெய்கிறது,தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு எற்படும் அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும்.
 4. கம்பு கூழ் சாப்பிடுவதால் பெண்களுக்கு எற்படும் முடி உதிர்தல் குறைகிறது.
 5. குழந்தை பெற்ற தாய்மார்கள் தினமும் கம்பு கூழ் அல்லது கம்பு சேர்த்த உணவுகளை உண்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
 6. விளையாட்டு வீரர்கள் உணவில் பயன்படுத்தினால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும்.
 7. உடல் எடையை கூட்டவும்,குறைக்கவும் உதவுகிறது.உடல் எடையை கூட்ட கம்புடன் பாதம்பருப்பு மற்றும் முந்திரிபருப்புடன் கம்பை சாப்பிடவேண்டும்,உடல் எடையை குறைக்க கம்பங் கூழ் அல்லது களி செய்து சாப்பிடலாம்.
 8. கம்பங் கூழ் அல்லது களி செய்து சாப்பிடுவதன் மூலம் எல்லாவிதமான அல்சர் நோய்களையும் சரிசெய்கிறது.
 9. கம்பில்  கால்சியம் சத்து அதிகம் உள்ளது. ஒருவர் தினமும் கம்மங்கூழை குடித்து வந்தால், இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரித்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது. 
 10. வெயில் காலத்தில் நிறைய பேர் உடல் சூட்டால் கஷ்டப்படுவார்கள். அவர்களின் உடல் சூட்டைத் தணிப்பதற்கு கம்மங்கூழ் உதவுகிறது., 
 11. கம்பின் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலமடையும்.
 12. கம்பங் கூழ் அல்லது களி செய்து சாப்பிடுவதன் மூலம் பார்வைக்கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. 
 13. வெள்ளையணுக்களையும், சிகப்பணுக்களையும் அதிகரிக்க கம்பை சாப்பிடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்