முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சீமை அகத்தியின் மருத்துவ பயன்கள்

 

  1. முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள்,சிறிய பூனை முடிகள் மற்றும் தேவையற்ற முடிகளை அகற்ற சீமை அகத்தி உதவுகிறது.
  2. உடல் சருமத்தில் ஏற்படும், சொறி, சிரங்கு, தேமல் போன்ற சரும வியாதிகளையும், சரிசெய்யும் தன்மை கொண்டது சீமை அகத்தி.
  3. சீமை அகத்தியை, உடலுக்கு உட்கொள்ளும் மருந்துகள் மூலம் மட்டுமன்றி, உடலுக்கு அழகு தரும் வெளிப்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள்.
  4. சீமை அகத்தியை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி அதனை தடவி வந்தால் தோல் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தும்.
  5. சீமை அகத்தி இலைகளை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து நன்கு அரைத்து, இரவு  உறங்குமுன் முகத்தில் பூசிவிட்டு, காலையில் முகத்தை நீரில் அலசி வர, வறண்ட சருமம் கொண்ட முகம் மிருதுவாகி மீண்டும் பொலிவாகும்.
  6. படர் தாமரை பாதிப்பை சரி செய்ய சீமை அகத்தி இலைகளை நன்கு மையாக அரைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய்  சேர்த்து, தினமும் இருவேளை படர் தாமரை உள்ள இடங்களில் தடவி வர, விரைவில் பாதிப்புகள் நீங்கி, உடல் சருமம் இயல்பாகும்.
  7. சீமை அகத்தியின் பசுமையான இலைகளை நன்கு அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து, உடலில் அரிப்பு, ஆறாத புண் மற்றும் வண்டுகடி காயங்களின் மேல் தடவி வர, சில நாட்களில், விஷக்கடி பாதிப்புகள் விலகி, காயங்கள் ஆறி விடும்.
  8. சீமை அகத்திக் கீரை, பூஞ்சைத் தொற்று மற்றும் வியாதி எதிர்ப்புத் தன்மையில் சிறந்த ஆற்றலைப் பெற்றுள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago