முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பொன்னாங்கன்னி கீரையின் மருத்துவ பயன்கள்

  1. உணவே மருந்து  என்ற பழமொழி கீரைகளுக்குப் பொருந்தும்,பொன்னாங்கன்னி கீரையை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தும்.
  2. பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன.
  3. தினசரி பொன்னாங்கன்னி கீரையைச் சாப்பிட்டு வந்தால் தேமல் மற்றும் சொறி, சிரங்குகள் குணமாகும்.
  4. பொன்னாங்கன்னி கீரையை சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது, தளர்ச்சியை போக்கி எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்க செய்கிறது.
  5. பொன்னாங்கண்ணி கீரையை கண்ணில் உள்ள குறைபாடுகளை நீக்கி, கண்ணுக்கு ஔி தருகிறது.
  6. பொன்னாங்கன்னி கீரையை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தம் தூய்மை அடையும்.
  7. பொன்னாங்கன்னி கீரையை சாப்பிட்டு வந்தால் வெட்டு காயங்கள் குணமாகும்.
  8. பொன்னாங்கன்னி கீரை பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், மற்றும் உடல் வலியை நீக்கி உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது.
  9. பொன்னாங்கன்னி கீரையை சாப்பிட்டு வந்தால் பற்கள் வலுவாகும்.
  10. பொன்னாங்கன்னி கீரையை சாப்பிட்டு வந்தால் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.
  11. பொன்னாங்கன்னி கீரை உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை அழித்து கழிவுகளாக வெளியேற்ற உதவுகிறது.
  12. கூந்தல் நன்றாக வளர பொன்னாங்கண்ணி கீரையின் சாற்றை தேங்காய் எண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தைலமாக பயன்படுத்தலாம்.
  13. பொன்னாங்கன்னி கீரையை சாப்பிட்டு வந்தால்  பயணங்களின் போது ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்,உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.
  14. பொன்னாங்கன்னி கீரை ஆரோக்கியமான சருமத்தை தரும் ஆற்றல் கொண்டது. பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும், அழகு மேம்படும்.
  15. பொன்னாங்கன்னி  கீரை மேனிக்கு மினுமினுப்பையும் அழகையும் தரக்கூடியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்