முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மக்காச்சோளத்தின் மருத்துவ பலன்கள்

  1. மக்காசோளத்தை பச்சையாகவோ,நெருப்பில் சுட்டோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம்.
  2. இரும்புச்சத்து அதிகம் உள்ள மக்காசோளத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து ஹீமோகுளோபின் அளவு  அதிகரிக்கிறது.
  3. மக்காசோளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலமடையும்.
  4. ஊட்ட சத்து  தேவைப்படும் குழந்தைகளுக்கு மக்காச் சோள மாவை வைத்து வடை,முறுக்கு போன்ற சிற்றுண்டிகளை  செய்து தரலாம்.
  5.  மக்காச்சோளமாவை வைத்து கஞ்சி செய்து, ஊட்ட உணவாக தாராளமாகப் பயன்படுத்தலாம். 
  6. மக்காசோளம் பார்வைக்கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. 
  7. மக்காசோளம் உடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மைகொண்டது.
  8. மக்காசோளம் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது.
  9.  மக்காசோளத்தில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளதால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தவிர்த்து, உணவு செரிமானமாக உதவி புரிகிறது.
  10. மக்காசோளம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் இதயத்திற்கு செல்லக்கூடிய நரம்புகள் போன்றவற்றில் கொழுப்புகள் படிந்து விடாமல் தடுத்து, சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்கிறது. 
  11. பெண்கள் மக்காச்சோளமாவையும்,சாதம் வடித்த கஞ்சியையும் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவு பெரும்.
  12. மக்காச்சோளத்தில் சரியான அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளை கொண்டது. மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago