முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மலசிக்கல் நீங்க இயற்கை மருத்துவம்

  1. தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தால்  மலச்சிக்கல் வருகிறது.
  2. மாத்திரை இல்லாமல் இயற்கை முறையில் மலச்சிக்கல்,பிரச்சனைக்கு தீர்வு காண்பது பாதுகாப்பானது. 
  3. தினமும் கீரை, பச்சை காய்கறிகள், பழங்கள், போன்றவற்றை தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள். உணவுகள் எளிமையானதாக இருக்கட்டும். எளிதில் செரிமானமாகும் உணவுகளாக இருக்கட்டும்.
  4. ஜீரண மண்டலத்துக்கு சிக்கலை உண்டாக்கும் மைதா, பேக்கரி உணவுகள் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். காரமான,புளிப்பு மிகுந்த உணவுகளும் கூட தவிர்க்க வேண்டும்.
  5. ஹார்மோன் சுரப்பில் உண்டாகும் மாற்றத்தால் தசைகள் தளர்வடையும். உணவுகளும் குடலில் மெதுவாக செல்லும். மெதுவான செரிமானம் ஆகும். இது மலச்சிக்கலை உண்டு செய்யும்.
  6. ஒரு டம்ளர் வெந்நீரில்  எலுமிச்சை பழச்சாறு 7 சொட்டுகள் மற்றும் விளக்கெண்ணெய் 7 சொட்டுகள் ஊற்றி கலந்து குடிக்க மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது. 
  7. நார்ச்சத்தும் வைட்டமின் சி யும் நிறைந்திருக்கும் கொய்யாபழம் மலச்சிக்கலை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
  8. பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது மலச்சிக்கல், மலச்சிக்கல் வராமல் பெண்கள் பேறுகாலத்தை கடக்க முடியாது. மலச்சிக்கல் வராமல் தடுக்க உணவு முறைகளில் கவனம் செலுத்தினால் போதும். 
  9. ஆப்பிளில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. ஆப்பிளை தினம் ஒன்று எடுத்துகொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது. 
  10. உலர்ந்த திராட்சை, அத்திப்பழம், பேரீச்சைபழம், அக்ரூட், பாதாம், வால்நட் போன்றவை உடலுக்கு சக்தி தரும் உணவு பொருள்கள். அதோடு இவை நார்ச்சத்து மிகுந்தவை என்பதால் மலச்ச்சிக்கல் தீவிரமாக இருந்தாலும் இதை தொடர்ந்து எடுத்துவரும் போது மலச்சிக்கலை படிப்படியாக சரிசெய்துவிட முடியும்.
  11. இயல்பாகவே உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க மலச்சிக்கலை படிப்படியாக சரிசெய்துவிட முடியும். தண்ணீர் குடிப்பது சிரமமாக இருந்தால் எலுமிச்சை சாறு, ஸ்ட்ராபெர்ரி பழத்துண்டுகள், வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிட வேண்டும், நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர்வரை குடியுங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago