முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கருவளையத்தை போக்க எளிமையான மருத்துவம்

கண்ணுக்கு கீழ் கருவளையம் வரக் காரணம் என்ன?

  1. சரியாக தூங்கவில்லை எனில் கருவளையம் வரும்.
  2. மலச்சிக்கல் இருந்தால் கண்ணுக்கு கீழ் கருவளையம் வரும்.  
  3. அதிக நேரம் இரண்டு சக்கர வாகனத்தை பயன் படுத்தினால் கண்ணுக்கு கீழ் கருவளையம் வரும்.
  4. உடல் வெப்பம் கூடுவதால் கண் எரிச்சல்,கருவளையம் வரும். 

கருவளையத்தை போக்க எளிமையான மருத்துவம்

 

சிறிதளவு கசகசவை தண்ணீரில் ஊற வைத்து பின்னர் பன்னீரை ஊற்றி நன்கு அரைத்து கருவளையம் உள்ள இடத்தில் தினமும் இரவு நேரத்தில் பற்றிட்டு தூங்கினால் ஒரு வாரம் முதல் 10 நாட்களில் கண்ணுக்கு கீழ் வரும் கருவளையம் குறையம்.

 

 கண்ணுக்கு கீழ் கருவளையம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

 

  1. கண்ணுக்கு கீழ் கருவளையம் வருவது ஒரு நோய் அல்ல,குறைபாடு மட்டுமே.
  2.  தொடர் வேலை,அதிக நேரம் இரண்டு சக்கர வாகனத்தை பயன்படுத்துவது, அதிக நேரம் டிவிபார்ப்பது ஆகியவற்றை தவிர்த்து, கண்ணுக்கு  ஓய்வு தர வேண்டும்.
  3.  மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  4.  இரவு நேரத்தில் அலர்ஜி தரக்கூடிய உணவுகளை சாப்பிடக்கூடாது
  5. குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  6.  உடல் சூடு குறைய அசைவ உணவுகளை தவிர்த்து,நீர் மோர் தொடர்ந்து அருந்தி வரலாம்.
  7.  சிறிதளவு வெந்தயத்தை இரவு ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து மறுநாள் காலை அருந்த உடல் சூடு குறையும்.
  8.  தினமும் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும்.
  9.  வாரம் இரு முறை நல்லெண்ணெய் குளியல் செய்து வர,கண் எரிச்சல் மற்றும்  உடல் சூடு குறையும்.
  10. பணியில் ஈடுபடும் போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை  5 நிமிடம் கண்ணுக்கு ஒய்வு தர வேண்டும்.
  11.  பன்னீரை பஞ்சில் நனைத்து  கண்ணுக்கு கீழ் வைத்து வர கண்ணுக்கு கீழ் வரும் கருவளையம் குறையும்.
  12.  அடிக்கடி குளிர்ந்த நீரை கொண்டு கண்களை நன்கு கழுவ வேண்டும். 

கண் பயிற்சி ;--

கண்களை மேல்,கீழ், மற்றும் வலது,இடது புறமாக கண்விழியை சுற்றும் பயிற்சியை செய்ய வேண்டும். 

இந்த பயிற்சி செய்வதால் கண்ணுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்,மேலும் உடல் வெப்பம் குறையும் கண்ணுக்கு கீழ் வரும் கருவளையம் குறையும்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago