முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பித்தவெடிப்பைகுணப்படுத்த எளிமையான டிப்ஸ்

 

  1. கால்களை சரிவர பராமரிக்கவில்லை எனில் கால்களில் பித்தவெடிப்பு ஏற்படுகிறது.
  2. உடலில் ஏற்படும் தட்ப வெப்ப நிலை மாறுதல் காரணமாகவும் பித்தவெடிப்பு வரலாம்.
  3. தரம் இல்லாத செருப்புக்களை அணிவதாலும் கால்களில் பித்தவெடிப்பு ஏற்படுகிறது. 
  4. கால்களில் ஏற்படும் பித்தவெடிப்பை மிக எளிமையான குணப்படுத்த முடியும்.
  5. சாதம் வடித்த கஞ்சியை சிறிதளவு சாதத்துடன் எடுத்து அதனுடன் ஒரு நெல்லிக்காய் அளவுக்கு சுண்ணாம்பையும் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்தால் ஒரு பேஸ்ட்டு பதத்திற்கு வரும் அதனை, கால்களில் பித்தவெடிப்பு உள்ள இடத்தில் தடவிவர வலிகள் குறைந்து பித்தவெடிப்புகள்  மறையும்.
  6. மிக எளிமையான இந்த மருத்துவத்தை தொடர்ந்து 7 நாட்கள் பயன்படுத்தி வந்தால் பித்தவெடிப்புகள் குணமாகும்.
  7. இளம் சூட்டில் உள்ள சாதம் வடித்த தண்ணீரில் சிறிது நேரம் கால்களை வைத்து வர வலிகள் குறைந்து பித்தவெடிப்புகள் மறையும்.
  8. 7 முதல் 10 நாளில் நாள்பட்ட பித்த வெடிப்பும் இந்த வைத்திய முறையில் சரியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!