முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபா அமெரிக்கா கால்பந்து: பராகுவேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா அணி

செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பிரேசிலியா : மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா, பராகுவே அணியை வீழ்த்தி காலிறுதிக்கானா இடத்தை உறுதி செய்துள்ளது.

கோம்ஸ் கோல்... 

47-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா- பராகுவே அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 10-வது நிமிடத்தில் பப்பு கோம்ஸ் கோல் அடித்தார். 

2-வது வெற்றி

அர்ஜென்டினா பெற்ற 2-வது வெற்றியாகும். ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் உருகுவேயை வீழ்த்தி இருந்தது. சிலியுடன் 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. இதன் மூலம் அர்ஜென்டினா கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் பொலிவியாவை 28-ம் தேதி எதிர்கொள்கிறது.

உருகுவே - சிலி... 

இதே பிரிவில் உருகுவே- சிலி அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. சிலி அணி ஒரு வெற்றி, 2 டிராவுடன் 5 புள்ளிகளை பெற்று கால் இறுதியை உறுதி செய்துள்ளது. ‘பி’ பிரிவில் இருந்து பிரேசில் 2 வெற்றியுடன் ஏற்கனவே கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து