முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விண்வெளி சுற்றுலாவுக்கு நீங்கள் தயாரா?

விண்வெளிக்குச் செல்வது என்பது இதுவரை நீண்டகால பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்களால் மட்டுமே சாத்தியமாக இருந்தது. 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ரஸ்யாவைச் சேர்ந்த யூரி காகரின் என்ற விண்வெளி வீரர்தான் வொஸ்ரொக் என்ற விண்கலத்தில் முதலாவதாக புவியீர்ப்பைக் கடந்து விண்வெளி சென்று திரும்பி வந்தார். இரண்டு வருடங்களின் பின் 1963 ஆம் ஆண்டு வலன்ரீனா ரெரஸ்கோவா என்ற ரஸ்ய பெண்மணியே விண்வெளிக்குச் சென்ற முதலாவது பெண்மணியானார். சுமார் 60 வருடங்களுக்கு முன் இப்படியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட விண்வெளிப் பயணம் இன்று வளர்ச்சி அடைந்து பயிற்சி பெறாத சாதாரண பயணிகள்கூட விண்வெளிக்குச் செல்லலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் மற்றும் ப்ளு ஒரிஜின் நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களும் விண்வெளிக்கு உல்லாசப் பயணிகளைக் குறைந்த செலவில் கொண்டு செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. விண்வெளிப் பயணங்களைத் தொடர்ந்து, விரைவில் கிரகங்களுக்கான சுற்றுலாப் பயணங்களும் நடைபெற இருக்கின்றன.

பூமிக்கு ஆபத்து

‘பிளாணட் எக்ஸ்- தி 2017 அரைவல்’ என்ற பெயரில் டேவிட் மேட் எனும் எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகத்தில் சூரியனைப் போன்றதொரு கோள் பூமியை நோக்கி பயணித்து வருகிறது. நிபிரு என்று அழைக்கப்படும் அந்த நெருப்புக் கோள் பூமியின் தென்துருவம் மீது வரும் அக்டோபரில் மோதும். இதனால் பூமி முழுமையாக அழியும் என்று எழுதியுள்ளார்.

காதலுக்காக பழங்களை பரிசாக அளிக்கும் வவ்வால்கள்

வவ்வால்கள் குறித்த ஆய்வில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும் குறிப்பாக எகிப்து நாட்டு வவ்வால்கள் காதலுக்காக பழங்களை பரிசாக பெறுவது தெரியவந்துள்ளது. பெண் வவ்வால்கள் தங்களது காதலின் போது ஆண் வவ்வால்களின் வாயிலிருந்து பழங்களை கவ்வி எடுத்து உண்ணும் என்பை இஸ்ரேல் நாட்டு டெல் அவிவ் பல்கலை கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

புதினாவின் சக்தி

புதினாவை துவையலாக செய்து சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகள் அகலும், கடுமையான வயிற்றிப் போக்கினை நிறுத்தும். இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட் சத்துக்கள் உள்ளன.

30 ஆண்டுகளாக...

அமெரிக்காவை சேர்ந்த கார்ல் பாடன் (64) என்பவர் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் செல்போன்கள் வருவதற்கு முன்பே ‘செல்பி’ எடுக்க தொடங்கினார். கடந்த 30 ஆண்டுகளாக ‘செல்பி’ எடுத்து வருகிறார். முதலில் சாதாரண 35 எம்.எம். கேமராவில் டிரைபோட் மற்றும் சாதாரண வெளிச்சத்தில் செல்பி எடுத்தார்.

இளமையாக இருக்க

பற்களை பாதுகாத்து இளமையாக வாழ, தினந்தோறும் இருமுறை பல் துலக்க வேண்டும். வாய் கொப்பளிக்கும் மருந்து உபயோகப்படுத்துதல்.  பல் இடுக்குளில் உள்ள உணவுகளை அகற்ற டெண்டல் பிளாஸ்  உபயோகப்படுத்துதல். 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுதல் போன்றவற்றை தவறாமல் செய்ய வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்