எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் விளைவு , திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கின.
அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் என்ற பெயரில் திறனறி தேர்வுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படு வருகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் எஸ்சிஇஆர்டி இயக்குநர் ஆகிய இருவரும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
“கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://txam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். வினாத்தாள்களை பதிவிறக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.ஒவ்வொரு கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வும் 40 நிமிடங்களில் நிறைவு செய்யத்தக்க வகையில் 25 கொள்குறி வகை வினாக்களைக் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண்ணைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அந்த வினா தாள்களிலேயே மாணவர்களைக் குறிப்பிடச் செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில் குறிப்பிட்டுள்ள நாளன்று தவறாமல் நடத்த வேண்டும். இத்தேர்வுக்கான வினாக்கள் அந்தந்த வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்காக வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
விடைகளை மாணவர்கள் தாங்களாகவே எழுதுவதை வகுப்பாசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்.தேர்வுக்குப் பின் வரும் கற்பித்தல் நாட்களில், இந்த வினாத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள், வினா அமைப்பு, தேர்வுகளில் தாள்களில் வினாவை எதிர்கொள்ளும் முறை குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் ஒரு முறை என 6 முதல் 9 வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு , திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் (Learning Outcome/ Competency Based Test) நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த தேர்வு அரசுப் பள்ளிகளில் நேற்று தொடங்கின.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |