முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் மாகாண முதல்வராக நவாஸ் ஷெரீப் மகள் பதவியேற்பு

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      உலகம்
Pak 2023-02-27

Source: provided

லாகூர் : பஞ்சாப் மாகாண முதல்வராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் பதவியேற்று கொண்டார். 

பாகிஸ்தானில் கடந்த 8-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சட்டமன்றங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடந்தது. இதில்,நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால்,முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பி.எம்.எல்(என்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வருகின்றன.

பஞ்சாப் மாகாண சட்ட பேரவைக்கு நடந்த தேர்தலில், பி.எம்.எல். (என்)கட்சி 137 இடங்களில் வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 113 இடங்களில் வெற்றி பெற்றனர். தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பிஎம்எல்(என்) கட்சி முதல்வராக மரியம் நவாஸ்(50) தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பஞ்சாப் மாகாண முதல்வராக மரியம் நவாஸ் நேற்று முன்தினம் பொறுப்பேற்று கொண்டார். 

பாகிஸ்தான் வரலாற்றில் பெண் ஒருவர் மாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.பதவியேற்ற பிறகு அவர் பேசுகையில்,‘

என்னுடைய தந்தை அமர்ந்திருந்த ஆசனத்தில் இப்போது அமர்ந்துள்ளேன். இந்த பதவிக்கு ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த பெருமை. பெண் தலைமைத்துவம் என்ற நடைமுறை தொடரும் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து