முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      தமிழகம்
EPS 2024-04-17

Source: provided

சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அனல் பறந்த மக்களவைத் தேர்தல் பிரசாரம் நேற்று (ஏப். 17) மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.  இதையடுத்து, இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகளின் தலைவா்களும், வேட்பாளா்களும் ஈடுபட்டனர்.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் தலைவா்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சேலத்தில் ரோடு ஷோ மூலம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். ஏற்காடு பிரதான சாலை அஸ்தம்பட்டி சந்திப்பில் இருந்து சேலம் நகரப் பகுதி வரை திறந்த வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து