முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      தமிழகம்
TNPSC 2022 12 20

Source: provided

சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். 

தேர்வாணையத்தின் திருத்தியமைக்கப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான தேர்வுகால அட்டவணை நேற்று (ஏப். 24) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு ஜூன் மாதம் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13-ஆம் தேதியும், 2,030 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28-ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவும் நிறைவடைந்துவிட்டது. இந்த நிலையில், குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மார்ச் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 27-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து