முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வாத நோய்கள் குணமாக | சித்த மருத்துவ குறிப்புக்கள் | Arthritis | Joint Pain

siddha-2

பாரிசு வாதம் ;-- நன்னாரிவேர் 20  கிராம் போட்டு சுண்ட காய்ச்சி வடிகட்டி சாப்பிட்டு வரக்குணமாகும்.

வாதவலி தீர ;-- ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம்.

வாத நோய்தீர ;-- கட்டுக்கொடி இலை,சுக்கு மிளகு சேர்த்து காய்ச்சி கொடுக்க வேண்டும்.

பக்கவாதம் தீர;-- சங்கிலை வேர் பட்டையை அரைத்து வெந்நீரில் குடிக்க வேண்டும்.

முடக்கு வாதம்;-- பாதாளமூலியை  முள் நீக்கி விளக்கெண்ணையில் வாட்டி கட்டலாம்,ஒத்தடமும் கொடுக்கலாம்.

வாதமுட்டு வலி குணமாக ;-- வெங்காய சாறை கடுகெண்ணையில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவவும்.

சன்னி,பிடரி,இசிவு வாதநொய்கள் தீர ;-- வேப்பெண்ணையில் தலை முழுகி வர நோய்கள் தீரும்.

வாத நோய் குணமாக;-- குப்பைமேனி இலையை சாறு எடுத்து தினசரி ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வர குணமாகும்.

கீழ்வாதம் தீர;-- முருங்கைபட்டை மற்றும்  கடுகு சேர்த்து அரைத்து பற்றிடலாம்.

வாத நோய்,வாதவீக்கம் தீர ;--மிளகாய் பூண்டுவிதை கஷாயம் செய்து 2 வேளை குடிக்கலாம்.

வாத பிடிப்பு,வீக்கம் தீர;-- முடக்கத்தான் இலையை விளக்கெண்ணையில்  வதக்கி கட்டி வரவும்.

வாதவலி வாதநோய் குணமாக;-- கட்டுக்கொடி வேர் சிறிதளவும் ஒருதுண்டு சுக்கு 4 மிளகு போட்டு காய்ச்சி கொடுக்கலாம்.

வலிப்பு நோய்யை தடுக்க;-- தினசரி ஆட்டுப்பால் சாப்பிட்டு வரவும்.

முடக்கு வாதம் நீங்க;-- மாவிலங்க இலையை கஷாயம் செய்து சமஅளவு தேங்காய் பாலில் கலந்து 3 வேளை குடிக்கவும்.

வாதம்,பிடிப்பு குணமாக;-- முடக்கத்தான் இலைகளை நறுக்கி அரிசிமாவுடன் கலந்து அடை செய்து சாப்பிடலாம்.

கீழ்வாத வீக்கம் குறைய ;-- சக்தி சாரணை சாற்றுடன் நல்லெண்ணை கலந்து காய்ச்சி தடவி வரலாம்.

வாத வீக்கம்,கீழ்வாயு தீர;- சங்கிலை,வேம்பு,குப்பைமேனி,நாயுருவி,நொச்சி ஆகியவற்றை அவித்து வேது பிடிக்கலாம்.

வாதத்தால் எற்படும் உடல்வலி தீர ;-- நொச்சி இலையை கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளிக்கலாம்.

வாதவலி;-- ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம்.

மூலம் ;-- நாயுருவி விதைபொடி துத்தி கீரையுடன் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

வாதவீக்கம்,குடைச்சல்வலி தீர ;-- வாத நாராயணன் இலை சாறு குடித்து வரலாம்.

வாதம் ;--  நன்னாரி வேர் கஷாயம் செய்து சாப்பிடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis