முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘பெண்டானில்’ ஒரு பேரழிவு ஆயுதம்: முக்கிய உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2025      உலகம்
Trump

வாஷிங்டன், பெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார். இந்த செயற்கை ஓபியாய்டு ஒரு கடுமையான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராகத் தீவிரமான நடவடிக்கை எடுக்கப் போவதாக சபதம் செய்தார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “இன்று நான் கையெழுத்திடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிர்வாக உத்தரவின் மூலம், பெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக நாங்கள் வகைப்படுத்துகிறோம். பென்டானில் செய்யும் பேரழிவை எந்த வெடிகுண்டும் செய்வதில்லை.

பெண்டானில் காரணமாக நமக்குத் தெரிந்தவரை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முதல் மூன்று லட்சம் பேர் இறக்கின்றனர். அமெரிக்கக் குடும்பங்கள் மீதான இதன் தாக்கம் பேரழிவை ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவின் எதிரிகள் பென்டானிலை அமெரிக்காவுக்குள் கடத்துகிறார்கள், ஏனென்றால் அவர்கள் அமெரிக்கர்களைக் கொல்ல விரும்புகிறார்கள்.

சமீபத்தில் அமெரிக்காவில் பெரிய அளவிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில், அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய பெண்டானில் பறிமுதலை நாங்கள் மேற்கொண்டோம். அப்போது ஒரே நேரத்தில் மூன்று மில்லியன் பெண்டானில் மாத்திரைகளைப் பறிமுதல் செய்தோம். கடந்த மாதம் கொலராடோவில் மேலும் 1.7 மில்லியன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பெண்டானில் குறித்த இந்த உத்தரவு, நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடையது. போதைப்பொருள் கும்பல்கள் அமெரிக்காவுக்கு நேரடி ராணுவ அச்சுறுத்தலாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து