முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ஜம்மு - காஷ்மீரில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஜம்மு- காஷ்மீர் ஜார்க்கண்ட் மாநிலங்கலில் சமிபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி உறுதியாகிவிட்டது. ஆனால் காஷ்மீரில் தான் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் அங்கு இழுபறி நிலை நீடிக்கிறது.
மொத்தம் 87 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் 25 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 44 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 15 உறுப்பினர்களைப் பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சியுடனும், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை களுடனும் இணைந்து ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது.
இதுதொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலை வர் உமர் அப்துல்லாவுடன் பாஜக தலைவர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார் என்று செய்தி வெளியானது. ஆனால், அந்த தகவல்களை பாஜக பின்பு மறுத்துவிட்டது.
இந்நிலையில் செய்தியாளர் களிடம் பேசிய உமர் அப்துல்லா, “மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகமது சயீத் கேட்டுக்கொண்டால், அவருக்கு ஆதரவு தரத் தயாராக இருக்கிறோம்” என்றார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, ஜம்மு காஷ் மீருக்குச் சென்ற மத்திய நிதியமைச் சர் அருண் ஜேட்லி, பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மாநிலத்தில் ஆட்சி அமைப் பதில் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும் பொறுப்பு கட்சித் தலைவர் அமித் ஷாவுக்கு தரப்பட்டுள்ளது. யார் ஆட்சி அமைத்தாலும், அதில் பாஜக முக்கிய பங்காற்றும். இந்த முறை ஆட்சியில் யார் அமர்வது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் எங்களிடம் உள்ளது. ஆட்சி அமைக்கும் விவகாரத் தில் அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு ஜேட்லி கூறினார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் சைபுதீன் சோஸ் கூறும்போது, “ஒரே கருத்துடைய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும். மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகமது சயீத்துக்கு ஆதரவு அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம், 28 எம்.எல்.ஏ.க் களைப் பெற்றுள்ள மக்கள் ஜன நாயகக் கட்சி, தொடர்ந்து மவுன மாக இருந்து வருகிறது. அக்கட்சி யின் தலைவர் முப்தி முகமது சயீத், பாஜகவா, அல்லது காங்கிரஸா யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து