முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் மாணவிக்கு செக்ஸ் தொல்லை: கல்லூரி முதல்வர் கைது

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரள மாநிலம் கொல்லத்தையடுத்து அஞ்சாலுமூடு பகுதியில் பல்கலைக்கழக கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் வக்கீல் ராஜேஸ் என்பவராக முதல்வராக பணி புரிந்து வந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. இதுபற்றி பாஜக இளைஞரணியினர் பல்கலைக்கழக, பதிவாளர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினர்.

அதில் கல்லூரி முதல்வர் வக்கீல் ராஜேஸ் மாணவிகளுக்கு செல்போனில் செக்ஸ் தகவல்களை அனுப்பியதோடு அபாஸ படங்களையும் காட்டி அவர்களை உல்லாசத்திற்கு அளைத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தனர். இதன் பேரில் பல்கலைக்கழக பதிவாளர் முகமது பஷீர், இயக்குநர் ராஜன் ஆகியோர் நேற்று முன் தினம் விசாரணை நடத்த கல்லூரிக்கு வந்தனர். அப்போது பாஜக இளைஞரணியினர் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் கல்லூரி முதல்வருக்கு எதிராக கோஷமிட்டதுடன் அவருக்கு செருப்பு மாலை அணிவிக்கவும் முயற்சி செய்தனர்.

இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். இவர்கள் போராட்டக்காரர்களிடம் இருந்து கல்லூரி முதல்வரை காப்பாற்ற வேனில் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு நடத்திய விசாரணைக்கு பின்னர் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நேற்று அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து