எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நமது சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொண்டால், எந்தவித நோய் தாக்குதல்களில் இருந்தும் தப்பிக்கலாம். நமது சுற்றுபுறங்களில், கொசு உற்பத்தி ஆகாமல் சுத்தமாக வைக்க வேண்டும். டெங்கு ஜூரம், கொசு கடிப்பதால் ஏற்படும் வைரஸ் பாதிப்பால் பரவும் காய்ச்சல் ஆகும். இந்த காய்ச்சல் ஏடிஎஸ். (aides mosquito) என்னும் நோய் பரப்பும் கொசு கடிப்பதால் ஏற்படுகிறது. இரவில் கடிக்கும் கொசுவால் டெங்கு காய்ச்சல் வருவது இல்லை. டெங்கு பரப்பும் கொசுக்கள் தேங்கி கிடக்கும் சுத்தமான தண்ணீர், ஏர் கூலர், பூ ஜாடி ஆகியவற்றிலும், தேங்காய் சிரட்டை, டயர் ஆகியவற்றில் தேங்கியிருக்கும் தண்ணீரிலும் உற்பத்தியாகிறது.
டெங்கு காய்ச்சல் 5 நாட்களுக்கு இருக்கும். மூக்கு ஒழுகுதல்,லேசான இருமல், தொண்டை அடைத்துக்கொள்ளுதல், போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த காய்ச்சலின் போது சிறுவர்களுக்கு மேலும் சில அறிகுறிகள் காணப்படும். இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நாளில் அதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.
தலைவலி கடுமையாக இருக்கும். தசைகளிலும் மூட்டுகளிலும் கடுமையான வலி காணப்படும். காய்ச்சல் வந்த சில நாட்களில் குழந்தைகளுக்கு சொறி, சிரங்கு ஏற்படலாம். பசி எடுக்காது. குமட்டும். வாந்தி வரும். உடலில் உள்ள பல நிண நீர் சுரப்பிகளும் பெரிதாகி விடும். ஒரு வாரம் காய்ச்சல் இருக்கும். மறைவது போல மீண்டும் வரும். காய்ச்சலின் போதும் அது சரியான போதும் உடலில் பலவீனம் ஏற்படும். சில குழந்தைகளுக்கு ரத்தக்கசிவு ஏற்படலாம். இதனை கவனிக்காமல் விட்டால் ஆபத்தாகி விடும். இந்த காய்ச்சலுக்கு ஆன்ட்டிபயாடிக் மருந்து பயனளிக்காது. ஆஸ்பிரின் மாத்திரை ரத்தக்கசிவை அதிகரிக்கும். எனவே அந்த மாத்திரையை தரக்கூடாது. குழந்தைகளுக்க ஓய்வுதான் தேவை.
வலியை குறைக்கவும் காய்ச்சலை குறைப்பதற்கும் வென்னீரில் நனைத்த துணியால் ஒத்தி எடுக்கவும். ஆனால், ஹெமரேஜிக் காய்ச்சல் என்ற நிலையை டெங்கு காய்ச்சலில் ஏற்பட்டால், உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இந்த நிலையில், ரத்தக்கசிவு தெரியும். ஈரல் பெருத்து விடும். ரத்தத்தில் உள்ள தட்டடையணுக்கள் அளவு மிகவும் குறைந்து விடும்.
வீட்டில் பயன்படுத்தாத கூலர்களின் ஈரத்தை நன்கு காய வைக்க வேண்டும். பூ தொட்டி தண்ணீரை அடிக்கடி மாற்ற வேண்டும். தண்ணீரை தேக்கி வைக்கும் தொட்டி கிணறு ஆகியவற்றை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். தண்ணீரை அதிக பாத்திரங்களில் பல நாட்கள் பிடித்து வைக்கக்கூடாது.
முதல் நிலையில் (காய்ச்சல் வந்த 3 நாட்களில்) தொண்டையில் புண், மலச்சிக்கல், அதிக காய்ச்சல், தாகம், பலவீனம், வயிற்று பகுதி இளகிய நிலை ஆகிய அறிகுறிகள் காணப்படும். இந்த நிலையில் காய்ச்சலை எளிதில் குணமாக்கலாம். 2-வது நிலையில், காய்ச்சல் வந்த 7 நாட்களில் கடுமையான முதுகு வலி, உடலில் நீர் சத்து குறைந்து காணப்படும். உடல் முழுக்க சிவப்பு நிறத்தில் சொறி போன்று ஏற்படும். உடலில் ரத்தக்கசிவு, மூட்டு வலி, ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தி குறைவு, கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றில் வீக்கம், நுரையீரலில் நீர் தேங்கி வீக்கம் ஏற்படும். இந்த நிலை மோசமானதாக கருதப்பட்டாலும் 90 சதவீதம் நோயாளிகளை குணப்படுத்தலாம்.
3-வது நிலையில், காய்ச்சல் வந்த 7 நாட்களுக்கு பின்னர் கண்விழிகளில் ரத்தக்கசிவு, ஈரலில் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். வாதத்தை வெளியேற்றி பித்தத்தை குறைக்கும் விதமான சிகிச்சை, ரத்தம் சுத்தம் செய்ய கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் திறனை அதிகரிக்க வேண்டும். மேலும் ரத்தக்கசிவை நிறுத்தி உடலில் தேங்கும் கெட்ட நீரை வெளியேற்ற சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் மற்ற காய்ச்சலை விட கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் பல வித கஷாயங்களை தர வேண்டும்.
படேலா கடுரோகின்யாதி, மகாராச அனாதி, மன்சிஸ்டாதி, மகாதிகதகம், வாசா குலுத் சியாதி, நிலவேம்பு குடிநீர், பித்த சுரக்குடி நீர் கஷாயங்களை 50 மி.லி. அளவு எடுத்து 500 மி.லி லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 50 மி.லி முதல் 100 மி.லி வரை சுண்ட கொதிக்க வைத்து அதனை காலை, மாலை வெறும் வயிற்றில் பருகி வர வேண்டும். இப்படி செய்தால் 3 முதல் 4 வேளைகளில் நோய் தாக்கம் குறைந்து உணவு உட்கொள்ளும் நிலை ஏற்படும்.
உணவு உட்கொள்ள முடியாதவர்கள் உலர்ந்த திராட்சையை 6 மணி நேரம் ஊற வைத்து வெந்நீர் ஆறிய பின்னர், அதனை அருந்த வேண்டும். பொரியையும் நீரில் ஊற வைத்து உணவாக தரலாம். தும்பை இலை 20 மி.லி எடுத்து 100 மி.லி தண்ணீரில் கலந்து மிதமான சூட்டில் கொதிக்க வைத்து, 6 மணி நேரத்திற்கு ஒரு முறை தர வேண்டும். நில வேம்பு, சுக்கு, மிளகு பாற்படாகம், விலாமிச்சை , சந்தனம், பேய் புடல் கோரைக்கிழங்கு வெட்டி வேர் ஆகியவைகளை தேவையான அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடி கட்டி குடிக்க வேண்டும். மலை வேம்பு இலையை மிக்சியில் அரைத்து துணியில் வடிகட்டி அதிக பட்சம் 10 மி.லி.வரை நாள் ஒன்றுக்கு 4 முறை குடிக்கலாம். இவைகள் மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும். பிற வைரஸ் காய்ச்சலும் வராது.
பலவீனத்தை போக்க அமுக்கரா சூரணத்தை தேன் அல்லது நெய்யில் கொடுத்து வரலாம். டெங்கு காய்ச்சலை குணப்படுத்த சித்த மருந்துகளே சிறந்தவை. மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக மக்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பப்பாளி இலை ஜூஸ், மலை வேம்பு, நில வேம்புக்கஷாயம் ஆகியவற்றை கொடுப்பதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.நிலவேம்பு கஷாயம் காய்ச்சலை கட்டுப்படுத்தும். பப்பாளி இலை ஜூஸ் இரத்த தட்டைணுக்களை பெருக்கச்செய்யும். மலைவேம்பு கஷாயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். தீராத நோய்களை தீர்க்கும் வல்லமை சித்த மருத்துவத்திற்கு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-04-2025
22 Apr 2025 -
தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
22 Apr 2025சென்னை : தமிழ்நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை
22 Apr 2025புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
-
புதுச்சேரியில் பேருந்து நிலையத்தை திறக்க கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
22 Apr 2025புதுச்சேரி : புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க. மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
-
பிராமணர்கள் குறித்த அவதூறு கருத்து: மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்
22 Apr 2025டெல்லி : பிரமாணர் சமூகம் குறித்த கருத்துக்கு மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.
-
40-வது ஐ.பி.எல். லீக் ஆட்டம்: குஜராத் டைட்டன்ஸ் வெற்றி
22 Apr 2025கொல்கத்தா : கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
இந்த ஆண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
22 Apr 2025சென்னை : தமிழக சட்ட சபையில் மின்சாரத்துறை மானியக் கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.
-
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகள் கைது
22 Apr 2025சென்னை : சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் : சென்னை ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2025சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன், கன்னுக்குட்டி ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் : சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
22 Apr 2025சென்னை : அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ள
-
3 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைன் போர்: அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு
22 Apr 2025மாஸ்கோ : உக்ரைன் போர் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு: இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு
22 Apr 2025சென்னை : குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.
-
புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் குழுவில் 4 இந்திய கார்டினல்களுக்கு இடம்
22 Apr 2025வாடிகன் : புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் குழுவில் 4 இந்திய கார்டினல்கள் இடம் பெற்றனர்.
-
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு மீது விஜய் கடும் தாக்கு
22 Apr 2025சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களைத் தேர்தல் நேரத்தில் மட்டுமே நம்ப வைத்து ஏமாற்றுவதைக் கைவிட்டு விட்டு கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்ட
-
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
22 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக சம்பளம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
22 Apr 2025சென்னை : தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்ட ஜே.டி.வான்ஸ்
22 Apr 2025ஜெய்ப்பூர் : இந்தியா வந்துள்ள அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், நேற்று குடும்பத்துடன் ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்டார்.
-
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் குழந்தைகளுக்கு பரிசளித்த பிரதமர் மோடி
22 Apr 2025டெல்லி : அமெரிக்க துணை ஜனாதிபதி குழந்தைகளுக்கு பரிசளித்தார் பிரதமர் மோடி.
-
ஒரேநாளில் ரூ.2,200 அதிகரிப்பு: ரூ.75 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்
22 Apr 2025சென்னை : தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக நேற்று (ஏப்.22) பவுனுக்கு ரூ.2,200 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தானில் விபத்து: 16 பேர் பலி
22 Apr 2025லாகூர் : பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள மலைப்பகுதியில் அதிவேகமாகச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.
-
மோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
22 Apr 2025ஹைதராபாத் : ரியல் எஸ்டேட் நிறுவன நிதி மோசடி தொடர்பான வழக்கில் வரும் 28-ம் தேதி ஹைதராபாத் அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை
-
கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டங்கள்: தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை
22 Apr 2025சென்னை : அதிக லாபம் தரும் கவர்ச்சிகரமான முதலீட்டு தகவல்களை நம்ப வேண்டாம் என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
ஜம்மு-காஷ்மீரில் வெள்ளம்-நிலச்சரிவு: முதல்வர் உமர் அப்துல்லா நேரில் ஆறுதல்
22 Apr 2025ஸ்ரீநகர் : விலைமதில்லாத உயிர்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான நோக்கம்.
-
யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வில் உ.பி.யை சேர்ந்த மாணவி முதலிடம்
22 Apr 2025புதுடெல்லி : 2024 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் (ஏப். 22) வெளியிடப்பட்டுள்ளன.